சௌதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான வீசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
உம்ராவுக்காக சௌதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சௌதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.
COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு வீசாக்கள் வழங்கபடமாட்டா என்று சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
adaderana
DOWNLOAD AKURANATODAY APP TO YOUR MOBILE PHONE
“அக்குறண டுடே” App இனை இப்போதே உங்கள் போனுக்கு Install செய்யுங்கள்