அக்குறணையில் C.I.Dயினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை

நாங்கள் சி.ஐ.டி யினர், உங்­க­ளுக்கு ஐ.எஸ் அமைப்­புடன் தொடர்­பி­ருக்­கி­றது என தக­வல்கள் கிடைத்­துள்­ளன. உங்கள் வீட்­டைச்­சோ­த­னை­யிட வேண்டும் என வீட்­டுக்குள் புகுந்த  ஆறு கொள்­ளை­யர்கள் 40 பவுண் தங்க நகை­க­ளையும் 29 இலட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.

இச்­சம்­பவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு 9.00 மணி­ய­ளவில் அக்­கு­றணை அம்­பத்­தென்ன – பூஜா­பிட்டி வீதியில் அமைந்­துள்ள வீடொன்றில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் அல­வத்­து­கொட பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சந்­தே­கத்தின் பேரில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது வீட்டு உரி­மை­யாளர் அக்­கு­ற­ணையில் நகைக்கடை­யொன்­றினை நடத்தி வரு­ப­வ­ராவார்.அவர் அன்று இந்­தி­யா­வுக்கு சென்­றுள்ளார். வீட்டில் அவ­ரது மனைவி மற்றும் மனை­வியின் தந்தை குடும்­பத்­தினர் இருந்­துள்­ளனர்.

அன்று இரவு 9.00 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்த அறுவர் தம்மை சி.ஐ.டி யைச் சேர்ந்­த­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். சி.ஐ.டி அடை­யாள அட்­டை­க­ளையும் காண்­பித்­துள்­ளனர். வீட்டு உரி­மை­யா­ள­ரையும் விசா­ரித்­துள்­ளனர். அவர் இந்­தி­யா­வுக்குச் சென்­றுள்­ள­தாக அவ­ரது மனை­வி­யினால் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளான ஐ.எஸ் பயங்­க­ர­வா­திகள் டுபாயில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னனர். அது தொடர்பில் விசா­ரணை நடத்த வேண்டும் எனக்­கூறி அவ­ரது மனை­வி­யிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்­டுள்­ளனர்.

அறு­வரில் இருவர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்­டி­ருக்­கையில் ஏனைய நால்­வரும் வீட்­டினை சோத­னைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். வீட்­டினை சோதனை நடத்­திய பின்பு சிறிது நேரத்தில் இது தொடர்பில் மீண்டும் அழைப்­ப­தாகக் கூறி­விட்டு வெளி­யேறிச் சென்­றுள்­ளனர்.

பின்பு வீட்டின் கீழ் மாடி­யையும் மேல்­மா­டி­யையும் சென்று பார்த்த போது தங்க நகை­களும் பணமும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ளது. சிவில் உடையில் வந்­த­வர்கள் தாங்கள் சி.ஐ.டி எனக்­கூறி அடை­யாள அட்­டை­க­ளையும் காண்­பித்­தனர். நாங்கள் அவர்­களை சி.ஐ.டி யினர் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என நகைக்­கடை உரி­மை­யா­ளரின் மனை­வியின் தந்தை எம்.எம்.எஸ்.ஏ.பரீட் தெரி­வித்தார். உடன் இது தொடர்பில் அல­வத்­து­கொட பொலிஸில் முறைப்­பாடு செய்தோம். சந்­தே­கத்தின் பேரில் வவு­னி­யாவைச் சேர்ந்த ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் கூறினார்கள் என்றார். அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter