வெலிகமையில் கைதானவர் ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின் கொள்கைகளை பின்பற்றுபவர் – DIG அஜித் ரோஹண

அடிப்படைவாத கருத்துகளை பிரசாரம்‌ செய்தமை மற்றும்‌ அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு உதவி ஓத்தாசைகளை வழங்கியமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை பயங்கரவாத தடுப்புப்‌ பிரிவினர்‌ கைது செய்துள்ளதாக பொலிஸ்‌ ஊடகப்‌ பேச்சாளர்‌ பிரதுப்‌ பொலிஸ்மா அதிபர்‌ அஜித்ரோஹண தெரிவித்தார்‌.

ஐக்கிய அரபு இராச்‌சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன்‌ இவரிடமிருந்து 27 இலட்சம்‌ ரூபா பணம்‌ மற்றும்‌ மூன்று மடிக்கணினிகள்‌ கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.

இது தொடர்பில்‌ அவர்‌ மேலும்‌ கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தன தற்கொலை தாக்குதல்‌ சம்பவம்‌ தொடர்பில்‌, பொலிஸார்‌, குற்றப்‌ புலனாய்வு பிரிவினர் மற்றும்‌ பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்‌. இதற்கமைய இந்த தாக்குதல்‌ சம்பவத்துடன்‌ நேரடி மற்றும்‌ மறைமுக தொடர்பை கொண்டவர்கள்‌ அனைவரும்‌ கைது செய்யப்பட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில்‌ , ஐக்‌இய அரபு இராச்சியம்‌ உள்ளிட்ட மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குள்‌ அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்த நபர்கள்‌ தொடர்பில்‌ பல்வேறு தகவல்கள்‌ இடைக்கப்‌ பெற்றுள்ளன. இந்த வகையில்‌ பலர்‌ அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்‌.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில்‌ ஒருவர்‌ கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்ததுடன்‌ அவர்‌ பயங்கரவாதத்‌ தடுப்பு பிரிவினரினால்‌ தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்‌. இதேவேளை , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வெலிகம பகுதியில்‌ வைத்து மேலும்‌ ஒரு சந்தேக நபரைக்‌ கைது செய்துள்ளனர்‌. மாவனெல்ல பகுதியைச்‌ சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்‌.

சந்தேக நபர்‌ ஐக்‌௫ய அரபு இராச்‌சியத்தில்‌ வசித்து வந்துள்ள நிலையில்‌ , அவர்‌ கடந்த 12 ஆம்‌ திகதி வெள்ளிக்‌கழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும்‌ விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்‌ அடிப்படைவாத கருத்துகளை பிரசாரம்‌ செய்துள்ளதாகவும்‌ அடிப்படைவாத செயற்பாடுகளில்‌ ஈடுபடும்‌ நபர்களுக்காக நிதி சேகரிப்பில்‌ ஈடுபட்டமை மற்றும்‌ அவர்களுக்கு பண உதவிகளை செய்துள்ளதாகவும்‌ கூறப்படுகிறது.

இதேவேளை இவர்‌ ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின்‌ கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருபவர்‌ என்றும்‌ தெரியவந்துள்ளது.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 27 இலட்சம்‌ ரூபா பணம்‌ மற்றும்‌ 3 மடிக்கணனிகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ கைப்பற்றியுள்ளனர்‌. சந்தேக நரை பயங்கரவாத தடைச்‌ சட்டத்தின்‌ கழ்‌ தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவும்‌ பயங்கரவாத தடுப்பு பிரிவினர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்‌ என்றார்‌.

(செ.தேன்மொழி) மெட்ரோ செய்திகள்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Visitor Counters Flag Counter