லுக்மான்‌ தாலிப்‌, ஸாரா, ரிம்ஸான்‌ குறித்து ஆழமான விசாரணைகள்

ஏப்ரல்‌ 21 தொடர்‌ தற்‌கொலை குண்டுத்‌ தாக்குதல்‌களை நடாத்திய கும்பலுக்கு தலைவனாக செயற்பட்டதாக நம்பப்படும்‌ சஹ்ரான்‌ ஹாஷீம்‌, அவரது சகோதரர்‌ ரில்வான்‌ மற்றும்‌ தேசிய தெளஹீத்‌ ஜமாஅத்தின் சிரேஷ்ட தலைவராக ௧௫தப்படும்‌ நெளபர்‌ மெளலவி ஆகியோருடன்‌ மிக நெருங்‌கிய தொடர்புகளை பேணிய, இந்திய மாநில உளவுத்‌ துறை ஒன்றின்‌ அபூ ஹிந்த்‌ எனும்‌ பெயரால்‌ அறியப்படும்‌ நபர்‌ தொடர்பிலும்‌…

மேலும்‌ நால்வர்‌ குறித்தும்‌ விஷேட விசாரணைகளுக்கு சட்ட மா அதிபர்‌ தப்புல டி லிவேரா பொலிஸ்‌ மா அதிபருக்கு நேற்று முன்‌ தினம்‌ விஷேட ஆலோசனைகளை வழங்கி யுள்ளார்‌.

அபு ஹிந்த்‌, அஹமட்‌ தாலிப்‌ லுக்மான்‌ தாலிப்‌ அவரது மகனான லுக்மான்‌ தாலிப்‌ அஹமட்‌ எனும்‌ அபூ அப்துல்லாஹ்‌. ரிம்சான்‌, புலஸ்திினி மகேந்திரன்‌ எனும்‌ சாரா ஜஸ்மின்‌ ஆகியோர்‌ தொடர்பிலேயே இந்த சிறப்பு விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபரால்‌ ஆலோசனை வழங்‌கப்பட்டுள்ளது. ஏப்ரல்‌ 21 தற்கொலை குண்டுத்‌ தாக்குதல்களுடன்‌ அவர்களுக்கு உள்ள தொடர்புகள்‌ குறித்து இந்த விசாரணைகளில்‌ அவதானம்‌ செலுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்‌ சுட்டிக்‌ காட்டினாம்‌

கடந்த திங்களன்று, கர்தினால்‌ மெல்கம்‌ ரஞ்சித்‌ ஆண்‌ கையை சந்தித்துள்ள சட்‌. மா அதிபர்‌, அதன்போது குறித்த பயங்கரவாத தற்கொலை தாக்குதல்‌ தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள்‌ தொடர்பில்‌ விளக்கமளித்ததாகவும்‌. இந்‌ நிலையிலையே நேற்று முன்தினம்‌ ஜனாடுபதி விசாரணை ஆணைக்‌ குழுவின்‌ இறுதி அறிக்கையில்‌ 17 ஆம்‌ அத்தியாயத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து குறித்த ஐவர்‌ தொடர்‌பிலும்‌ விசாரணைக்கு சிறப்பு ஆலோசனைகள்‌ வழங்கப்பட்டுள்ளதாகவும்‌ அரச சட்டவாதி நிஷாரா ஐயரத்ன குறிப்பிட்டார்‌.

தாக்குதலுடன்‌ தொடர்புடைய அனைவருக்கும்‌ எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபர்‌ தற்போதும்‌ நடவடிக்கை எடுத்துள்ளார்‌. குறிப்பாக தற்போதைக்கு சட்ட மா அதிபருக்கு இடைக்கப்‌ பெற்றுள்ள சாட்சிங்‌களை ஆராய 12 பேர்‌ கொண்ட சிரேஷ்ட சட்டவாதிகளைக்‌ கொண்ட கூழு நியமிக்கப்பட்டு அவை ஆராயப்பட்டு வருகின்‌றது. இந்த விடயங்களை சட்ட மா அதிபர்‌ கர்தினால்‌ மெல்கம்‌ ரஞ்சித்‌ ஆண்டகைக்கு அறிவித்தார்‌.

இதனைவிட, இந்த தாக்குதலுடன்‌ தொடர்புடைய அனைவருக்கும்‌ எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்னர்‌, பிரதானமாக இரு விடயங்களை ஆராய வேண்டும்‌. ஒன்று, சம்பவம்‌ குறித்து சி.ஐ.டி. முன்னெடுத்த முழுமையான விசாரணை. மற்றையது ஜனாதிபதி விசாரணை ஆணைக்‌ குழு முன்னெடுத்த சாட்சி விசாரணைகளில்‌ பதியப்பட்ட அனைத்து சாட்சியங்களையும்‌ சட்‌டமா அதிபர்‌ ஆராய வேண்டும்‌. இந்‌ நிலையிலேயே ஆணைக்‌ குழுவின்‌ அறிக்கையின்‌ 17 ஆம்‌ அத்தியாயத்தில்‌ கூறப்பட்டுள்ள ஐவர்‌ தொடர்பிலும்‌ சிறப்பு விசாரணைகளுக்கு சட்ட மா அதிபர்‌ பொலிஸ்‌ மா அதிபடுக்கு ஆலோசனை வழங்கினார்‌ என சட்ட மா அதிபரின்‌ செய்தித்‌ தொடர்பாளர்‌ அரச சட்டவாதி திஷாரா ஐயரத்ன குறிப்‌பிட்டார்

இந்‌ நிலையில்‌ இது குறித்த விசாரணைகளையும்‌, சஹ்ரான்‌ கும்பலுடனேயே இருத்து சாய்ந்தமருது தற்கொலைத்‌ தாகுதலின்‌ பின்னர்‌ இறந்ததாக எந்த அறிவியல் தடயங்களும்‌ இல்லாத. கட்டுவாபிட்டி தேவாலய தாக்குதல்தாரியின்‌ பனைவி சாரா ஜெஸ்மின்‌ பற்றிய விசாரணைகளையும்‌ இடை நிறுத்தாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்‌ என ஜனாதிபதி விசாரணை ஆணைக்‌ குழு தனது இறுதி அறிக்கையின்‌ 17 ஆம்‌ அத்தியாம்‌ ஊடாக பரிந்துரைத்துள்‌ளது.

சட்ட மா அதிபரின்‌ ஆலோசனைகளில்‌ குறிப்பிட ப்பட்டுள்ள அஹபட்‌ தாலிப்‌ லுக்மான்‌ தாலிப்‌ அவரது மகனான லுக்மான்‌ தாலிப்‌ அஹமட்‌ எனும்‌ அபூ அப்துல்லாஹ்‌ ஆகியோர்‌ அவுஸ்திரேலியாவில்‌ விக்கும்‌ இலங்கையர்களாவர்‌. இவர்கள்‌ மீது பயங்கரவாதத்துடன்‌ தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள்‌ உள்ள நிலையில்‌. மாவனெல்லை புத்தர்‌ சிலை உடைப்பு விவகார பிரதான சூத்திரதாரியான சாதிக்கின்‌ சாட்சியம்‌ பிரகாரம்‌ இலங்கையில்‌ மேலும்‌ 4 மாலை தீவு பிரஜைகளுடன்‌ இணைந்து அடிப்படைவாத கலந்துரையாடல்கலில்‌ ஈடுபட்டமை தொடர்பிலும்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சட்‌டமா அதிபர்‌ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஐந்தாவது நபரான ரிம்சான்‌. என்பவர்‌ அமெரிக்கா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ குறித்து வழக்குத்‌ தொடுத்த மூவரில்‌ ஒருவராவார்‌. அவர்‌ அல்கைதா அமைப்புடன்‌ தொடர்புடைய துருக்கியின்‌ அபூ அப்துல்லாஹ்‌ அல்யெமனி என்பவருடன்‌ தொடர்புகளை பேணியதாக கூறப்படுகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே ஆழமான விசாரணைகளுக்கு சட்ட மா அதிபர்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter