தற்போது அக்குரணையில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து முகமாக 27.12.2020 இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அனைவரும் சுய தனிமைப் படுத்தலுக்கு உற்படுங்கள்
எமது காரியாயத்தினால் உருவாக்கப்பட்டுள்ள கிராமிய விழிப்புணர்வுக் குழுவின் அறிவுறுத்தல்களை பேணிக் கொள்ளுங்கள்
அயல் வீடாக இருப்பினும் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
மிக அத்தியாவசிய தேவைக்காக உங்கள் வீட்டை விட்டு வெளியேறத் தேவைப்பட்டால் உங்கள் மஹல்லா கண்காணிப்புக் குழுவிற்கு அது பற்றி தெரிவியுங்கள். அவ்வாறு வெளியேறும் சந்தர்ப்பங்களில் தங்களது பெயர் தொலைபேசி இலக்கம், என்பவற்றை மஹல்லா கண்காணிப்புக் குழுவிற்கு வழங்குவதோடு முறையாக முகக்கவசம் அணிந்து பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியைப் பேணி சன நெரிசலான இடங்களைத் தவிர்த்து உங்கள் அவசரத் தேவை முடிந்த பின் நேரடியாக வீடுகளுக்குத் திரும்பி விடுங்கள்.
உங்கள் வீடுகளில் உள்ள யாருக்காவது காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் உடனடியாக முகக்கவசம் அணிவித்து வீட்டிற்குள் ளேயே வேறாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குங்கள் அத்துடன் மருத்துவ ஆலோசனைகளை நாடுங்கள்.
இவ்வறிவுறுத்தல்களை பேணுவதன் மூலம் முழு அக்குறணையையும் முடக்கப்படுவதில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்வோம்
இப்படிக்கு
சுகாதார வைத்திய அதிகாரி
Dr. Sanjeeva Kurundu Gammana
மற்றும்
பதில் சுகாதார வைத்திய அதிகாரி
Dr. Haris Mohammed