கொவிட்-19 காரணமாக, பள்ளிவாசல்களில் தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைக்க வேண்டாம்.

கொவிட்-19 காரணமாக, பள்ளிவாசல்களில் தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைக்க வேண்டாம் 

  • வக்ப் சபை பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் வேண்டுகோள்

பள்ளிவாசல்களுக்கு சமூகமளிப்பவர்களின் பொதுப் பாவனைக்காக, தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைப்பதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறு, வக்ப் சபைப் பணிப்பாளரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப், அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனைத்துப் பள்ளிவாசல்களினதும் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களிடமும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளதாவது,

தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு சமூகமளிக்கின்ற சிலரது வசதிகளைக் கருத்திற்கொண்டு வைக்கப்பட்டிருக்கும் தொப்பிகளை, பள்ளிவாசலுக்கு வருகின்ற பலரும் பாவிப்பதன் மூலம், கொவிட்-19 தொற்று மேலும் பரவும் அபாயம் நிலவுகின்றது.

எனவே, இதனைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு சமூகமளிப்பவர்களின் பொதுப் பாவனைக்காக தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைப்பதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறும், அவர் அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter