இலங்கையில் கொரோனாவின் 3 வது அலையா..?

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுப்பதற்கான தேசிய மையத்தினால் நேற்று நடத்தப்படட கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் அனைத்து பிரிவுகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, இராணுவ தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா தொற்றின் அளவு பரவல் மூன்றாம் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தியதுடன், பண்டராகம, நுவரெலியா மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பகுதிகளில் மையமாக வைத்து மேலும் ஆன்டிஜென் Antigen பரிசோதனைகள் மற்றும் PCR சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய கலந்துரையாடலில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், அந்த பகுதிகளில் இருந்து வெளியே தொற்று பரவுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter