“என்னுடைய வழக்கு, திட்டமிட்ட ஒரு பழிவாங்கல். அதை இப்பொழுது தான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது.

மக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த அவர், பிணையில் (24) விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், தான் பிணையில் வந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “என்னுடைய வழக்கு, திட்டமிட்ட ஒரு பழிவாங்கல். அதை இன்றுதான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்ககெனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன்.

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி, நான் வெளியில்வர வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter