மத்திய மாகாண கொவிட் நோயாளர்கள் தொடர்பில் விளக்கம்

மத்திய மாகாணத்தினுள்ளும் தற்போதைய நிலையில் கொவிட் நோயாளர்கள் பதிவாவது தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று விசேட விளக்கமளிப்பொன்றை வழங்கியிருந்தார்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரதேசங்களிலிருந்து சென்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இரண்டு இடங்களில் பதிவாகியுள்ளன.

ஒரு இடம் மஸ்கெலியா. கடந்த தினத்தில் தமிழர்களின் பண்டிகை ஒன்று இருந்தது. நாம் அறிவித்திருந்தோம் மலையக பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று. எனினும் நபர் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அதேபோல் நுவரேலியா பிரதேசத்திற்கும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவர் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் மலையகத்திற்கு நோய் பரவியுள்ளது.

நாம் இந்த இரண்டு விடயங்களையும் புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணை செய்தோம். ஒரு சில பிரதேசங்களில் நோயாளர்கள் பதிவாகும் அதேவேளை ஏனைய பிரதேசங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.

அதனடிப்படையிலேயே தனிமை படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter