விட்­டுக்­கொ­டுப்­பாரா.. ரணில்? விட்­டுப்­பி­ரி­வாரா.. சஜித்?: ஐ.தே.கவின் தலை­யெ­ழுத்தை தீர்­மா­னிக்கும் செயற்­குழு கூட்டம்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவில் நிலவும் 30 வெற்­றி­டங்­க­ளுக்கு தனக்கு சார்­பா­ன­வர்­களை நிய­மித்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மிறங்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திட்­ட­மிட்டு வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் எதிர்­வரும் புதன்­கி­ழ­மை­யன்று  கட்­சியின் செயற்­கு­ழுவை கூட்டி இறுதி முடிவை அறி­விப்­ப­தாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்ள நிலையில் செயற்­குழு உறுப்­பி­னர்­களின் புதிய நிய­மனம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது, புதிய செயற்­குழு உறுப்­பி­னர்­களை நிய­மித்து அதில் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து வாக்­கெ­டுப்பை நடத்தி இறுதி தீர்­மானம் எடுக்க 

திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் இடம் பெற்­றுள்­ள­மை­யினால் செயற்­குழு கூட்­டத்தின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக செயற்­குழு நிய­மிப்­ப­தற்கு அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

 மேலும் செயற்­குழு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிரே­ரிக்­காத பட்­சத்தில் அதன் தீர்ப்பு ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரே­ரிக்கும் ஒரு­வ­ருக்கே சாத­க­மாக அமையும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்­நி­லையில் அமைச்சர் ரஞ்சித் அலு­வி­ஹா­ர­வு­ட­னான சந்­திப்­பொன்றின் போது தான் நிச்­ச­ய­மாக ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­ரங்­கு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் செயற்­பாட்டை கண்­டித்­துள்ள சஜித் தரப்­பினர் எதிர்­வரும் 25 ஆம் திகதி செயற்­கு­ழுவின் தீர்­மானம் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு சாத­க­மாக அமை­யா­விடின் புதிய கூட்­ட­ணியில் தேர்­தலில் கள­மி­றங்க போவ­தாக எச்­ச­ரித்­துள்­ள­துடன் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு போராட்­டத்­தையும் மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த சர்ச்சை தற்­போது கட்சி மட்­டத்­திலும் அர­சியல் மட்­டத்­திலும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆரம்பம் முதல் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்குள் இழு­பறி நிலை காணப்­பட்ட நிலையில் தற்­போது தேர்தல் நெருங்கி வரு­வதால் கட்­சியின் வேட்­பா­ளரை அறி­விக்க வேண்­டிய கட்­டாய கட்­டத்தில் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் மும்­முனை போட்டி நில­விய நிலையில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தான் ஜனா­தி­பதி வேட்­பாளர் அபேட்­ச­க­ருக்­கான போட்­டியில் இருந்து வில­கிக்­கொள்­வ­தாக தெரி­வித்­த­தாக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம பிர­த­ம­ருக்கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்சி தலை­வர்­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தையின் போது தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித்தா? ருணிலா? என்­பதே கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஜாதிக ஹெல உறு­மய  போன்ற முக்­கிய கட்­சி­களின் தலை­வர்கள் சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும் என தமது ஆத­ர­வான நிலைப்­பாட்டை தெரி­வித்­துள்­ளனர். மேலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் பிர­த­ம­ராக பதவி வகிக்க வேண்டும் என தெரி­வித்­துள்­ளனர். இந்த நிலைப்­பாட்டை தெரி­வித்­த­மை­யினால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி;யின் தலை­வர்­க­ளுக்கும் இடையில் கருத்து முரண்­பாடும் ஏற்­பட்­டுள்­ளது.

இக்­கா­ர­ணி­களை அடிப்­ப­டை­யாக வைத்து நோக்கும் போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் நிலைப்­பாடு சஜித்­துக்கு ஆத­ர­வாக இருப்­ப­தையே புலப்­ப­டுத்­து­கின்­றது. இவ்­வா­றான நிலையில் எதிர்­வரும் 25 ஆம் திகதி ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராக அறி­விக்­கா­விடின் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பங்­கா­ளி­கட்­சி­களின் ஆத­ரவு கேள்­விக்­கு­றி­யா­கி­விடும் அபாயம் உள்­ளது.

மாறாக சஜித் தரப்­பினர் குறிப்­பி­டு­வதை போன்று அவர்கள் பிரிந்து சென்று தனித்து கூட்­ட­ணி­ய­மைத்து சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யிட செய்தால் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவு சஜித்­துக்கு கிடைக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இவ்வாறான நிலையில் ரணில் விட்டுக்கொடுக்காமல் களமறங்கினால் அவரால் தனித்து போட்டியிட்டு வெல்ல முடியுமா என்பது ஒரு புறமிருக்க சஜித்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த முக்கிய பல உறுப்பினர்கள் வெளியேறுவார்களாயின் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறப்படுகின்றது.

எனவே எதிர்வரும் 25 ஆம் திகதி செயற்குழுவின் தீர்மானம் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியின் இருப்பிலும் முக்கிய  திருப்புமுனையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter