2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பிலும் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.
´நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு´ தேசிய கொள்கைப் பிரகடனத்தின் பத்து அம்சக் கொள்கைகளில் ஒன்றான ´மிடுக்கான தேசம்´ (Smart Nation) எனும் நோக்கத்தை அடைவதற்காக ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகம் மற்றும் அதற்குத் தேவையான வசதியளித்தல்களுக்கான மூலோபாயம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதுடன், அது தேசிய நிகழ்ச்சித்திட்டமாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் இணைந்து இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தைத் தயாரித்துள்ளதுடன், அதன் ஒரு பகுதியாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கும் கருத்திட்டம் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• குறித்த நிகழ்ச்சித்திட்டத்தைத் தயாரிக்கும் குழுவால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்திற்கான அங்கீகாரம்
• இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நிறுவுவதற்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை நியமித்தல்
• இலங்கைக்கான ஓன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்திற்கு ஒப்படைத்தல்
• இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
• இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளுக்காக 1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும்
• குறித்த கருத்திட்டத்தை 2022.12.31 இல் பூர்த்தி செய்தல்.