பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இது போன்று பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களது கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளப்படும். இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கும் உரிய தினத்தை அறிவிப்பதில் தாமதம் நிலவுகின்றது.
3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. ஆனால் நாட்டில் இன்று நிலவும் கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு பின்னர் தாமதித்து பாடசாலை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதாவது நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிப்பதாக நாம் அறிவித்திருந்தோம்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 23 திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் சுகாதார பாதுகாப்பை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு குறித்த விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். இன்னுமொன்று மாணவர் சமூகத்தின் எதிர்காலம் இந்த 2 விடயங்களையும் கவனத்தில் கொண்டே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.