நாடு சகல துறையிலும் வீழ்ச்சியடைந்து சீனாவிடமிருந்தும், அமெரிக்காவிடமிருந்தும் $1 Billion கடனை பெறுகின்றது

அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து $1 Billionயையும், சீனாவிடமிருந்து $1 Billionயையும் பெற்றுக் கொள்ளவுள்ளதோடு , குறுகிய கால கடன்களினால் வெகு விரைவில் நாடே கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2020ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்:-

நாட்டின் சகல துறைகளும் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது, சுற்றுலாத்துறையும் முழுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது, ஆனால் நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச முதலீடுகளை கூறி ஏமாற்றுகின்றனர். சர்வதேச தரவுகளுக்கமைய எமக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் எம்மை தரப்படுத்தலில் கீழ் நோக்கியே கொண்டு சென்றுள்ளனர். எனவே நாட்டில் பொய்யான தரவுகளை கூறி சர்வதேச முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் கடன் நெருக்கடி மோசமான நிலையில் தலை தூக்கிக் கொண்டுள்ளது. கையிருப்பு 5.8 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

நாம் உருவாக்கிய திட்டத்தில் தான் இந்த அரசாங்கமும் கடன்களை செலுத்தியது. ஆனால் தாமாக புதிய வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளதாக பொய்யை கூறுகின்றனர்.

இன்று அரசாங்கம் குறுகியகால கடன்களை பெற்று நிலைமைகளை சமாளிகின்றது. இந்தியாவிடமிருந்து $400 Millionயையும் ( சுமார் 7,360 கோடி ரூபா ) பெற்றுக் கொண்டது, இப்போது அமெரிக்காவிடம் $1 Billionயை ( சுமார் 18,400 கோடி ரூபா ) பெற்றுக் கொள்ளும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு விரைவில் அந்த கடன்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அதேபோல் சீனாவிடமிருந்து $1 Billionயையும் ( சுமார் 18,400 கோடி ரூபா ) பெற்றுக் கொள்ளவுள்ளனர். இவ்வாறான குறுகிய கால கடன்களினால் அடுத்த வருட இறுதிக்குள் நாடு மீண்டும் மோசமான கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உருவாகும் என தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter