நாடே இன்று முடங்கியுள்ள நிலையில் ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற ரீதியில் கேள்வியை எழுப்புகிறது என சிங்களே தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டில் பரவியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக இப்போது வரையில் 40க்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர்.
நாடே இன்று முடங்கியுள்ள நிலையில் ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற ரீதியில் கேள்வியை எழுப்புகிறது. இன்று நாட்டில் சகலரும் ஒரே விதமாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதில் அனைவருமே மீள வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
எனவே கொவிட் -19 வைரஸ் பரவலினால் உயிரிழந்த சகலருக்கும் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.