கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக அம்பியுலன்ஸை அழைப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அம்பியுலன்ஸ் சேவையை பெற்று கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.