வீடியோ: ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி நிலை என்ன? ஊடகப் பேச்சாளர் விளக்கம்.

‘கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரியினால்  இவ்வாரம் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது’ என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அதாவது, நடைமுறையில் உள்ள சட்டம் ,சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடல்களை உலர் வலய பிரதேசத்தில் அடக்க முடியுமா என்ற யோசனை மாத்திரமே  முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட  இந்த யோசனையை கொவிட்-19 வைரஸ் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்த தீர்மானம் சமூகவலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்ட வகையில் வெளியாகியுள்ளன என்றார்.

https://youtu.be/cLUpNhd7kPY

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter