விஷேட அறிவுறுத்தல் – அக்குறணை ஜமியதுல் உலமா

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

02-11-2020 ம் திகதி அக்குறணை ஜம்இய்யதுல் உலமாவின் கடிதத் தலைப்பில் வழங்கப்பட்ட தொழுகை ஏற்படுகள் சம்பந்தமான அறிவுறுத்தல் 3-11-2020ம் திகதி எங்களுக்கு சுகாதார அமைச்சின் செயலாளாரிடமிருந்து கிடைக்கப்பெற்ற புதிய சுற்று நிரூபத்திற்க்கமைய கீழ்வருமாறு விதிமுறைகள் மாற்றமடையும்.

1. ஐங்கால ஜமாஅத் தொழுகைகளை ஒரு நேரத்தில் 25 நபர்கள் மாத்திரம் பங்குபற்றுமாறு அமைத்துக் கொள்ளல்

2. ஜனாஸா தொழுகையினை 25 நபர்கள் மாத்திரம் பங்குபற்றுமாறு அமைத்துக்கொள்ளல்

3. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலின் படி ஜும்ஆ தொழுகை நடாத்தப்படமாட்டாது. பதிலாக 25 நபர்களைக் கொண்டு ளுஹர் தொழுகையை நடாத்துதல். தேவை ஏற்படின் மஸ்ஜிதின் இமாமைக் கொண்டு 10 நிமிடத்தினுல் சிறு உபதேசம் நடாத்த முடியும்.

இவை தவிர்ந்த ஏனைய விதிமுறைகளை ஏற்கனவே தரப்பட்ட அறிவுறுத்தள்களுக்கமைய பின்பற்றவும்.

குறிப்பு:
இத்துடன் சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபம் இணைக்கப்பட்டுள்ளது.
மேற் குறிப்பிடப்பட்ட விடயங்களை உடன் அமுலுக்கு கொண்டு வருமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.

U.L. MARZOOK (Falahi)
செயலாளர் (General Secretary)
All Ceylon Jamiyyathul Ulama
Akurana Branch

மேலதிக தொடர்புகளுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்
0773786538 / 0773848580
Hotline: 077 6488874
E-mail: akjulama@gmail.com
03.11.2020

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter