நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுபாடுகள் எதுவும் இல்லை என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜீ.இளமநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரிசிக்கான கட்டுப்பாடு விலை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (04.11.2020) வெளியிடப்படவுள்ளதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களுக்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைய, மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசியை விநியோகிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மொத்த விற்பனைகளுக்காக கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதுடன், வெலிசறை பொருளாதார மையத்தில், மொத்த விற்பனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் காரணமாக, மொத்த விற்பனையாளர்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.