“தமது வியாபார நிலையங்களில் சுகாதார விதிமுறைகளைப் பேணுவதில் மேலும் கூடிய கவனம் செலுத்தவேன்டும்”- இஸ்திஹார்
கொரோனா தொற்று சம்பந்தமான பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை அக்குறணை வர்த்தகர்கள் பின்பற்றுவதைப் பரிசீலனை செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது , சுகாதார விதிமுறைகளை சரிவரப் பேணாத வர்த்தகர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து, அறிவுரைகளையும் வழங்கினார் அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன். அத்துடன், அக்குறணை பிரதேச எல்லைக்குள் அரச அதிகாரிகள் மூலம் தொடர்ந்து நிலைமைகள் கண்காணிக்கப்படும் எனவும், சுகாதார விதிமுறைகளை மீறிய, முறையற்ற வகையில் மேற்கொள்ளப்படும் வியாபாரங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த தவிசாளர், தமது வியாபார நிலையங்களில் சுகாதார விதிமுறைகளைப் பேணுவதில் மேலும் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர்களை வேண்டிக் கொண்டார்.
நகரில் மேற்கொள்ளப்பட்ட இக்கண்காணிப்பு நடவடிக்கையின் போது அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள், அலவதுகொடை பொலிஸ் உப பரீட்சகர் சமரகோன் ஆகியோருடன், அரச அதிகாரிகள், அக்குறணை வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.