மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
வெலிசர பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி மீண்டும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெலிசர பொருளாதார மத்திய நிலையம் முழுமையாகத் தொற்று நீக்கம் செய்யப்படும். அத்துடன் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அத்துடன், வெலிசர பொருளாதார மத்திய மொத்த விற்பனை நிலையத்தின் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதியில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.