கொரோனா! 23 மாவட்டங்களில் அதி அவதானமுடைய 133 சுகாதார மருத்துவ பிரிவுகள்

நாட்டில் கடந்த 14 நாட்கள் கொரோனா நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு அதி அவதானமுடைய பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ் அறிவித்தலில் கிளிநொச்சி மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் அபாயமுடைய பகுதிகள் எவையும் அடையாளப்படுத்தப்படவில்லை.

அதற்மைய 23 மாவட்டங்களில் 133 சுகாதார மருத்துவ பிரிவுகள் (எம்.ஓ.எச்.) அதி அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் , கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள், பொரல்லஸ்கமுவ, நுகேகொடை, ஹங்வெல்ல, மஹரகம, பிலியந்தல, பத்தரமுல்ல, கொலன்னாவ, தெஹிவளை, கஹதுட்டுவ, கோட்டை, பாதுக்கை, கொத்தொட்டுவ, மொறட்டுவ, கடுவலை, கெஸ்பேவ, ஈகொட உயன, ஹோமக ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா

கம்பஹாவில் றாகமை, மினுவாங்கொடை, வத்தளை, திவுலபிட்டி, ஜாஎல, கட்டான, சீதுவை, கம்பஹா, அத்தனகல்ல, களனி, மஹர, தொம்பே, மீரிகம, பியகம, நீர்கொழும்பு, கட்டுநாயக்க ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை

களுத்துறையில் ஹொரனை, பேருவளை, களுத்துறை, பண்டாரகம, அகலவத்த, புளத்சிங்கள, மத்துகம, பாணந்துறை, வலல்லாவிட்ட, மதுரவல, பாலிந்தநுவர, தொடங்கொட, மில்லனிய, வத்துவ ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தளம்

புத்தளத்தில் வென்னப்புவ, சிலாபம், தங்கொட்டுவ, ஆனைமடு, மாரவில, கல்பிட்டி ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல்

குருணாகலில் நிக்கரரெட்டி, பண்டுவஸ்நுவர கிழக்கு, அலவ்வ, கல்கமுவ, அம்பன்பொல, குளியாபிட்டி கிழக்கு, வாரியபொல, குருணாகல், பன்னல, குருணாகல் நகரசபை, கொபெய்கன, மல்லவபிட்டி, கட்டுபொத்த, குளியாபிட்டி, தம்பதெனிய ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி

கண்டியில் , யட்டிநுவர, கலஹா, நாவலபிட்டி, கம்பளை, மெனிஹின்ன, கங்காவத்த கோரள, தொலுவ, கடுகன்னாவ, கங்கைஹல, மெதகும்புர ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை

மாத்தளையில் கலேவெல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா

நுவரெலியாவில் கொத்மலை, மஸ்கெலியா, லிந்துலை, கொட்டகலை, அம்பகமுவ ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி

இரத்தினபுரியில் கஹவத்தை அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கேகாலை

கேகாலையில் மாவனெல்;லை, ருவன்வெல்ல, அரநாயக்க ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் உடுவில் , யாழ் நகரசபை , வேலணை ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு

மன்னாரில் மன்னார் பிரிவு , வவுனியாவில் வவுனியா பிரிவு , முல்லைத்தீவில் முல்லைத்தீவு பிரிவு ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் வாழைச்சேனை, வெள்ளாவெளி, கோரளப்பற்று , கிரன் ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை

அம்பாறையில் கல்முனை தெற்கு, பொத்துவில், சாய்ந்தமருது ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை

திருகோணமலையில் முதூர் மற்றும் உப்புவெலி ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பொலன்னறுவை

பொலன்னறுவையில் எலஹெர அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பதுளை

பதுளையில் பண்டாரவளை, கிரந்துருகோட்டை, ஊவா பரணகம, அப்புதளை, பசறை, வெலிமடை, எல்ல, தியத்தலாவை, லுனுகலை, கந்தகெட்டி ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை, அம்பாந்தோட்டை

மொனராகலையில் செவனகல , அம்பாந்தோட்டையில் தங்காலை, சூரியவௌ, திஸ்ஸமஹாராம, பெலியத்த ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தறை

மாத்தறையில் மாத்தறை, அக்குரஸ்ஸ, தெவிநுவர, கொடபொல, வெலிகம ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

காலி

காலியில் ஹிக்கடுவை, ரத்கம, காலி நகரசபை, கரந்தெனிய, பலப்பிட்டி, உடுகம, இமதுவ, அபராதுவை ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter