வைத்­தியர் ஷாபியின் விடு­தலை உணர்த்தும் உண்மை: சிறப்புப் பார்வை

கடந்த இரண்டு மாதங்­க­ளாக வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் பற்­றிய பேச்­சுக்­களே அதிகம் இருந்­தன. ஊட­கங்­க­ளிலும் தலைப்புச் செய்­தி­க­ளாக இடம்­பி­டித்துக் கொண்­டன. குரு­ணாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅ­திபர் கித்­சிரி ஜயலத் வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டையில்  சிங்­கள பத்­தி­ரிகை ஒன்று வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் 4000 ஆயிரம் சிங்­கள பெண்­க­ளுக்கு அவர்­களின் அனு­ம­தி­யின்றி கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்டார் என்று செய்தி வெளி­யிட்­டது. இச்­செய்­தியை மேலும் ஊதிப் பெருப்­பிக்கும் வகையில் ரஜ­ரட்ட பல்­கலைக் கழ­கத்தின் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, குருணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சரத் வீர­பண்டா ஆகி­யோர்­களின் கருத்­துக்­களும் அமைந்­தி­ருந்­தன. 

இதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அத்­து­ர­லியே ரத்ன தேரர், விமல் வீர­வன்ச உள்­ளிட்ட சிலர் இன­வாதக் கருத்­துக்­களை வெளி­யிட்டு சிங்­கள மக்­க­ளி­டையே காணப்­பட்ட கோபத்தை மேலும் வலுப்பெறச் செய்­தார்கள். வைத்­தியர் ஷாபி  சிங்­க­ள­வர்­களின் சனத் தொகையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு சிங்­களப் பெண்­க­ளுக்கு அனு­ம­தி­யின்றி கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்­டி­ருந்தால் அவர் மீது சிங்­கள மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற கோபத்தில் நியாயம் உள்­ளது. ஆனால், தனிப்­பிட்ட விரோதம், கட்­டி­ட­மொன்றின் கொள்­வ­னவில் ஏற்­பட்ட போட்டி ஆகி­யன கார­ண­மா­கவே   ஷாபி  மீது ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்­கப்­பட்­டன என்­பது குற்றப் புல­னாய்வு பொலி­ஸாரின் விசா­ர­ணை­களின் போது தெரிய வந்­துள்­ளது. ஒரு­வரை பழி­வாங்­கு­வ­தற்கு பொலிஸ் உயர் அதி­காரி ஒருவர் சட்­டத்தை எந்­த­ள­விற்கு கையில்  எடுத்­துள்ளார்  என்றும் தெரியவந்­துள்­ளது.

   இரண்டு குற்­றச்­சாட்­டுக்கள்

 4000 ஆயிரம் பேருக்கு கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்டு பின்னர் 8000 ஆயிரம் என்று சொல்­லப்­பட்­டது. இந்த குற்­றச்­சாட்டு காட்டு தீ போல் நாட்டு மக்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்த நிலையில் வைத்­தியர் ஷாபி  வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்­துக்­களை சேர்த்தார் என்ற புதிய குற்­றச்­சாட்டின் பேரில் குரு­ணாகல் பொலிஸார் அவரை கைது செய்­தனர். இது  ஷாபி மீதான திட்­ட­மிட்ட  நட­வ­டிக்கை  என்று புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. ஏனெனில், ஒரு வைத்­தி­ய­ரினால் தனித்து நின்று கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்ள முடி­யாது.

குரு­ணாகல் நகரில் கட்­டி­ட­மொன்றின் கொள்­வ­னவில் ஷாபிக்கும்  சிங்­களவர்த்­தகர் ஒரு­வ­ருக்கும் இடையே ஏற்­பட்ட போட்டி, குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சாலை  பணிப்­பா­ள­ருக்கும் வைத்­தியர் ஷாபிக்கும்  இடையே ஏற்­க­னவே ஏற்­பட்­டி­ருந்த தனிப்­பட்ட பகை  கார­ண­மா­க­வுமே அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்  என்றும்  தெரி­ய­வந்­துள்­ளன. ஒருவர் வரு­மா­னத்­திற்கு மீறிய வகையில் சொத்துக்­களை சேர்த்தால் எந்த முறைப்­பா­டு­களும் இல்­லாத நிலையில் அவரை  பொலி­ஸா­ரினால் கைது செய்ய முடி­யாது. வரு­மா­னத்­திற்கு மீறிய வகையில் ஒருவர் சொத்­துக்­களை சேர்த்­தி­ருந்தால் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழுவே விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும். இந்த விதி முறை வைத்­தியர் ஷாபி  கைது விட­யத்தில் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

இவ­ரது  கைது சிங்­கள மக்­க­ளி­டையே பீதி­யையும்,   இன­வா­திகள் மத்­தியில் ஆக்­ரோ­ஷத்­தையும் ஏற்­ப­டுத்தியிருந்த நிலையில், அவ­ரது கைது பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கும், சுகா­தார அமைச்­சுக்கும் தலை­யி­டியை கொடுத்­தது. ஒரு­வரை முறைப்­பா­டு­க­ளின்றி கைது செய்ய முடி­யுமா? ஒரு வைத்­தி­ய­ரினால் தனியே கருத்­தடை சத்­திர சிகிச்­சையை திட்­ட­மிட்டு செய்ய முடி­யுமா?  போன்ற பல கேள்­விகள் தொடுக்­கப்­பட்­டன. மேலும், வைத்­தி­யர்கள் பலரும் மேற்­படி குற்­றச்­சாட்டை ஏற்றுக் கொள்ள முடி­யா­தென்று மறுத்­து­ரைத்­தார்கள்.

விசா­ர­ணைகள்

இவ­ரது  கைது தொடர்பில் பல கேள்­விகள் முன்வைக்­கப்­பட்ட நிலையில்  இவர் கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்டார் என்று முறைப்­பா­டுகள் இருக்­கு­மாயின் அதனை பொலிஸில் பதிவு செய்­யு­மாறு பொது அறி­வித்தல் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ள­ரினால் விடுக்­கப்­பட்­டது. ஒரு­வரை முறைப்­பா­டு­க­ளின்றி கைது செய்­து­விட்டு, இவர் இந்தக் குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். அது பற்­றிய முறைப்­பா­டுகள் இருந்தால் பொலிஸில் தெரி­வி­யுங்கள் என்று அறி­வித்தல் கொடுக்­கப்­பட்­டமை உலகில் இதுவே முதற் தட­வை­யாக இருக்க வேண்டும். இந்த அறி­வித்தல் பொலிஸ் திணைக்­க­ளத்தின் மீது எதிர் காலத்தில் பழி வந்து விடக் கூடா­தென்ற முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யா­கவே கருத வேண்டும். ஏனெனில், பதில் பொலிஸ் மாஅ­திபர் இவ­ரது கைது விட­யத்தில் உள்ள பார­தூ­ரத்தை தெளி­வாக புரிந்து கொண்ட நிலை­யி­லேயே மேற்­படி பொது அறி­வித்­தலை மேற்­கொண்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பொலிஸ் திணைக்­க­ளத்தின் அறி­வித்­த­லுக்கமைய வைத்­தி­ய­ருக்கு  எதி­ராக முறைப்­பா­டுகள் செய்தால் பணப் பரி­சுகள் தரப்­படும் என்று ஒரு சில இன­வா­திகள் தெரி­வித்­தி­ருந்­தார்கள். ஆயினும், ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முறைப்­பா­டு­களே பொலிஸில் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் குற்றப் புல­னாய்வு பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார்கள். ஊட­கங்­களின் மூல­மாக அறிந்து கொண்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் குற்றப் புல­னாய்வு பொலிஸார் சட்ட விரோ­மாக கருத்­தடை செய்தார் என்று முறைப்­பாடு செய்த 601 தாய்­மார்­க­ளி­டமும், மகப்­பேற்று வைத்­திய நிபு­ணர்கள் 07 பேரி­டமும், குருணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் தரத்­தை­யு­டைய வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும், குழந்­தைகள் வைத்­திய நிபு­ணர்கள் 06 பேரி­டமும், சத்­திர சிகிச்சை வைத்­தி­யர்­க­ளுக்கு உத­வி­யாக கட­மை­யாற்றும் வைத்­தி­யர்கள் 11 பேரி­டமும், சத்­திர சிகிச்­சைக்­காக உணர்­வி­ழக்கச் செய்யும் வைத்­தி­யர்கள் 10 பேரி­டமும், 70 தாதி­க­ளி­டமும், 18 உத­வி­யா­ளர்­க­ளி­டமும், பலோ­ப்பியன் உறுப்பு பற்றி ஒரு வைத்­தி­ய­ரி­டமும் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு மொத்­த­மாக 758 வாக்கு மூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் பதிவு செய்திருந்தார்கள்.

மேலும், குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­த­வர்­களை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தவும் குற்றப் புல­னாய்வு பொலிஸ் திணைக்­களம் நட­வ­டிக்­கைளை மேற்­கொண்­டது. ஆனால், பொலிஸில் முறைப்­பா­டு­களை செய்­த­வர்கள் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு முன் வர­வில்லை. இந்­நி­லையில் அத்­து­ர­லியே ரத்ன தேரர் மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தார். அத்­த­கைய பரி­சோ­த­னை­களை செய்­யாது வைத்­தி­ய­ருக்கு  தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தினார்.

இதன் பின்னர் குற்றப் புல­னாய்வு பொலிஸ் திணைக்­களம் தமது விசா­ரணை அறிக்­கையை நீதி­மன்­றத்­திற்கு வழங்­கி­யது. அதில் வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்­யப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எந்த ஆதா­ர­மில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனைத் தொடர்ந்து அத்­த­ர­லிய ரத்ன தேரர் குற்றப் புல­னாய்வு பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு எதி­ராக கருத்­துக்­களை முன் வைத்தார். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிபு­ணர்­களைக் கொண்டு வந்து விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டு­மென்று தெரி­வித்தார்.

பிணையில் விடு­தலை

இரண்டு மாதங்கள் வைத்­தியர் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் நாளுக்கு நாள் வலு­வி­ழந்து கொண்டு வந்­தன. 

இந்தப் பின்­ன­ணியில் கடந்த 25ஆம் திகதி குரு­நாகல் நீதி­மன்­றத்தில் வைத்­தியர் ஷாபி  மீதான வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன் போது சாட்­சி­ய­ம­ளித்த சட்­டமா அதிபர் வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் ஆதா­ர­மற்­றவை என்று தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து நீதி­மன்றம் வைத்­தி­யரை  ரூபா 250,000 ரொக்­கத்­திற்கும், ரூபா 2.5 மில்­லியன் 04 சரிரப் பிணை­யிலும்  விடு­தலை செய்­துள்­ளது.

ஆயினும், வரு­மா­னத்­திற்கு மீறிய சொத்­துக்­களை சேர்த்தார் என்ற குற்­றச்­சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

தடுக்­கப்­பட வேண்டும்

பொலிஸ் உயர் அதி­காரி ஒருவர் நினைத்தால் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்து கைது செய்­ய­லா­மென்ற நிலை இனியும் தொடரக் கூடாது. யாராக இருந்­தாலும், அவர் குற்றம் செய்­த­மைக்­கு­ரிய முறைப்­பா­டு­களும், ஆதா­ரங்­களும் இருந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஆனால், யாரும் தனிப்­பட்ட பழியை தீர்த்துக் கொள்­வ­தற்கு சட்­டத்­தை­கையில் எடுக்­கக்­கூ­டாது. அவ்­வாறு செய்­வது தொட­ரு­மாயின் நாட்டு மக்­க­ளுக்கு உண்­மையின் மீது நம்­பிக்கை இழக்கும் நிலை ஏற்­படும்.  

பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் வாக்­கு­களின் கூட்டல், கழித்­தல்­க­ளி­லேயே கவனம் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இந்த கூட்டல் கழித்தல் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்தி நாட்டில் நீதியை நிலை நாட்ட வேண்­டு­மாயின் சிறு­பான்­மை­யினர் ஒற்­று­மைப்­படல் வேண்டும். தங்­களின் வாக்குப் பலத்தை பயன்­ப­டுத்தி  இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தி நாட்டில் நீதியை நிலை நாட்ட வேண்­டி­யுள்­ளது. 

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களும், மக்கள் பிர­தி­நி­தி­க­ளும்தான் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்­திகள் என்று பேரி­ன­வாத கட்­சி­க­ளுக்கும், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் உணர்த்­தப்­படல் வேண்டும். இதற்கு சிறு­பான்­மை­யினர் ஒற்றுமைப்பட வேண்டும். இன்று சிறுபான்மையினர் ஒற்றுமைப்படுவதற்கு பதிலாக தங்களுக்குள் அடித்துக் கொண்டு பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம்கள் தங்களுக்குள்ளும், தமிழர்களுக்கும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஒற்றுமையை குழைக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி ஒலுவில் துறைமுகவிடுதியில் தங்கியிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப்போடு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதே வேளையில் அவருடன் சென்ற குழுவினர் அப்துல்லாஹ் மஹ்றூப்பின் வாகனத்தினை தாக்கி கண்ணாடியை உடைத்துள்ளார்கள். இவ்வாறு ஒற்றுமை  துளிர் விடும்  போதே  அதை கிள்ளி எறியும் நிலையே சிறுபான்மையினர் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்தால்  இனவாத நெருக்குதல்களிலிருந்து தப்ப முடியாது.

https://www.virakesari.lk/article/61406

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter