ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடலோர பாதையில் இயங்கும் ரயில்களுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலி, அளுத்கம, களுத்துறை வடக்கு, பாணந்துறை மற்றும் பெலியட்ட ஆகிய இடங்களிலிருந்து பல ரயில்கள் இயக்கப்படும் என்பதுடன் அந்தப் பயணம் கொள்ளுப்பிட்டியுடன் நிறைவடையும்.
இந்த ரயில் சேவைகள் காலையிலும் மாலையிலும் முன்னெடுக்கப்படும்.
களனி பள்ளத்தாக்கு பாதையில் ரயில்கள் நாரஹேன்பிட்டி வரை இயக்கப்படும் என்றும் புத்தளம் ரயில் சேவை வைக்கால் வரை இயக்கப்படும் என்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை புறக்கோட்டை பஸ் நிலையம், கோட்டை ரயில் நிலையம் ஆகியற்றில் இருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நடைபெற மாட்டாது.
இனால், பொதுமக்கள் அங்கு அனாசியமாக செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரிககை விடுத்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடி புறக்கோட்டைக்கும், கோட்டைக்கும் செல்வதால் பயனில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.