கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிப் பிரச்சாரம் செய்வர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
போலி பிரச்சாரங்களை பரப்பும் நபர்களை கண்டுபிடிப்பதற்கு குற்ற விசாரணை திணைக்களத்தின் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் 26 பேர் விசாரணைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா கொத்து உருவாகியதனை தொடர்ந்து பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.