- 2014 முதல் பாதுகாப்புத் தரப்புக்கு தகவல்களை வழங்கினோம்
- உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றுவோரே அதிகம்
- மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது நல்லது
- முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் பதவி அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது
- ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சு அவசியமில்லை
அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட மூதூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமது சபை ஊடாக பாதுகாப்புத் தரப்புக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடி சாட்சி எனவும் குறித்த சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டே அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயங்கள் தொடர்பில் தமது சபை தகவல்களை உரிய தரப்புக்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தும் கூட, மக்களின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனமை தொடர்பில்தான் கவலையடைவதாக இதன்போது உணர்வுபூர்வமாக சாட்சியம் வழங்கினார். ஆணைக் குழுவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை தாம் நல்குவதாகவும், எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் சாட்சியங்களை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் இதன்போது ஆணைக் குழுவின் உறுபினர்களிடம் சுட்டிக்காட்டினார்.
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம் பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபவளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் கடந்த முதலாம் திகதி இரவு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, சிரேஷ்ட அரச சட்டவாது சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் சாட்சியம் அளித்தார்.
இதன்போது உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி ஜாவிட் யூசுப் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்தார்.
இந்நிலையில், உலமா சபை தலைவரிடம் சாட்சிப் பதிவுகள் ஹலால் சான்றிதழ் விவகாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறே அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது எனவும் ஹராம் என்பது விலக்கப்பட்டது எனவும் சாட்சியமளித்து அது தொடர்பில் நீண்ட விளக்கத்தை ஆணைக் குழுவுக்கு அளித்தார். அத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆணைக் குழுவுக்கு கையளித்த அவர், அதன் பிரகாரம் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்க சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறினார்.
அரச சட்டவாதி: ஹலால் என்றால் என்ன?
றிஸ்வி முப்தி: ஹலால், ஹராம் என இரு விடயங்கள் உள்ளன. ஹலால் என்றால் ஆகுமானவை. சட்ட ரீதியானவை. ஹராம் என்றால் கூடாதவை, சட்ட விரோதமானவை. முஸ்லிம்களின் அன்றாட நடவடிக்கைகள், குடும்ப வாழ்க்கை, உணவு, பாவனைகள் அனைத்திலும் ஹலால் ஹராம் தாக்கம் செலுத்தும். உதாரணமாக தங்கம், முஸ்லிம்களை பொறுத்தவரை ஆண்களுக்கு ஹராம். அது பெண்களுக்கு ஆகுமானது. பன்றி முற்றிலும் ஹராம். ஹலால் என்பதன் வரை விலக்கணம் நீண்டது. உணவு, பான வகைகளுக்கும் அவ்வாறே ஹலால் விடயம் பொருந்தும், எவ்வாறாயினும் ஏற்பட்ட பல்வேறு நிலைமைகளை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமது சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்திக் கொண்டதாகவும், தற்போது அந்த செயற்பாட்டை எச்.ஏ.சி.நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.
அரச சட்டவாதி : வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஜம்இய்யதுல் உலமாவுக்கு உணவு, பான வகைகளுக்கு மட்டுமே ஹலால் சான்றிதழ் கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் பல் துலக்கும் தூரிகைகளுக்கு எதற்கு ஹலால் சான்றிதழ்?
தொடர்ச்சி … இங்கே கிளிக் பண்ணவும்