வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஓய்வூப் பெற்ற எட்மிரல் பேராசியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் இடவசதி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்க போதுமான இடவசதிகள் வைத்தியசாலைகளில் காணப்படாமை இதற்கான பிரிதொரு காரணமாகும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையயர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு வர இருந்த பல விமானங்களின் பயண அட்டவணைகளை திருத்தி அமைத்து எதிர்காலத்தில் இலங்கை பணியாளளளர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை வெளிநாடுகளில் தங்கியுள்ள 57 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டுக்கு வர விரும்பம் கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் டுபாயில் தங்கியுள்ள இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர எதிர்ப்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (12) காலை இடம்பெற்ற தெரண அருண நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே இராணுவத் தளபதி இதனை கூறினார். Ada-Derana