மினுவாங்கொட, பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி தினம் இன்றாகும்.
மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றியவர் இருப்பின் உடனடியாக தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவு செய்துகொள்ளாத, பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை உடனடியாக தங்களின் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
தகவல்களை மறைத்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சொத்துக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் அல்லது அரசுடமையாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் பாரிய கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் 1700இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றியவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 1030 பேருக்கு கொரோனா ரைவஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.