கம்பஹா மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொவிட்- 19 வைரஸ் பரவலுக்கும் இந்நியர்களுக்கும் தொடர்புண்டு என குறிப்பிடப்படும் விடயத்தில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கம்பஹா மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து பரவிய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொவிட் -19 பரவல் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்து பரவிய கொவிட்-19 தொற்றுக்கும், இந்நியர்களுக்கும் இடையில்தொடர்பு உண்டு என குறிப்பிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
வைரஸ் தொற்று பரவல் மூலம் கண்டறிவது இலகுவான காரியமல்ல, ஒரு கட்டத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்படும் போது அவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.
ஆகவே நிலைமையினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.