ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கண்டி குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர் நேற்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற விகாரைகளில் உள்ள தேரர்களையும் பிரபலமானவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி 5,379,900 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.
காலி பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பில் வத்தேகம, மாத்தறை, அநுராதபுரம், பெலியத்த, மதுகம, ஹிக்கடுவ, மீடியாகொட, மிஹான, தெல்தெனிய, பலாங்கொட, தம்புள்ளை, தலங்கம, கதான, அளுத்கம, நாரோஹேன்பிட்டிய, மினுவங்கொட, சபுகஸ்கந்த, நவகமுவ, கெக்கிராவ ஆகிய பகுதிகளில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.