2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டின் கொவிட்-19 நிலைமையை பரீட்சைகள் திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும், உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும்.
பரீட்சைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அட்டவணையானது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவித்தபடி 2020 உயர்தர் பரீட்சைகள் குறித்த கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகள் என்பவற்றுக்கு ஒக்டோபர் 06 நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்படவும் உள்ளன.
பொதுவாக உயர்தரப் பரீட்சைகளானது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். எனினும் கொரோனா தாக்கம் காரணமாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் 7 முதல் ஒப்டோபர் 2 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்கவே அது மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.