வாகன இறக்குமதியை நிறுத்திவைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் காரணமாக, இப்போது பல வாகன விற்பனை நிலையங்கள் காலியாக உள்ளன, சில வாகன விற்பனை நிலையங்கள் இரண்டு அல்லது மூன்று வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதாரங்களின்படி, பதிவு செய்யப்படாத சுமார் 3000 வாகனங்கள் மாத்திரமே பல விற்பனை நிலையங்களில் உள்ளன.
அதிக விற்பனையான சுசுகி வேகன் ஆர் Wegon R, டொயோட்டா பாசோ Passo, டொயோட்டா விட்ஸ் Vitz, சி.எச்.ஆர் CHR, வெசெல் Vesel மற்றும் கிரேஸ் வாகனங்களுக்கு உள்ளூர் சந்தையில் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள வாகனங்களுக்கு அதிக தேவை இருப்பதால் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இதுபோன்ற அதிக விலையில் கூட பெரும் தேவை இருப்பதாகவும், தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்றும் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில், வாகன விற்பனை நிலையங்களை பராமரிப்பது மற்றும் ஊதியம் கொடுப்பது கூட ஒரு பிரச்சினையாகிவிட்டது மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சில தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.