கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றுகிறது என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்தமாற்றம் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இன்று உலகை அச்சுறுத்தும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் நடக்கின்றன. இந் நிலையில், அந்த வைரஸின் தன்மை, தோற்றம் என்பவற்றை மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒருவரின் உடலில் நுழையும் கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தாக்குகிறது. பின்னர் மற்ற உறுப்புகளையும் பாதிப்படையச் செய்கிறது. இது வைரஸின் தன்மையைகணிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் கொரோனாவைரஸ் தனதுவடிவத்தையும் அடிக்கடி மாற்றுகின்றது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உருமாற்றம் மனிதர்களை இன்னும் விரைவாகவும் எளிதாகவும் தொற்றும் வகையில் அமைந்துள்ளது.
எனினும் இது மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.