ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது

மாத்தறையில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

குறித்த நபருக்கு விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்படவில்லை. 

அதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது பரிசோதனை மேற்கொண்ட போதே தொற்றுக்குள்ளாகியுள்ளமை 23 ஆம் திகதி புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து இரு தினங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை இறுதியாக மேற்கொண்ட பரிசோதனையின் போது தொற்று இல்லை என்ற பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளது. 

எனினும் இந்த பெறுபேற்றைக் கொண்டு அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று கூற முடியாது. தொடர்ந்தும் சிகிச்சையளிப்பதோடு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.

இவர் கடந்த 13 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சொந்தமான விமானமொன்றில் நாட்டுக்கு வந்துள்ளார் என்பதோடு இவருடன் மேலும் 15 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளனர். 

குறித்த நபரோரு நேரடியாக தொடர்பு கொண்டவர்களும் , அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter