நாட்டிலே ஏற்பட்ட கொரோனா நோய் நிலைமை சற்று தளர்ந்திருந்த பின்னணியில் மீண்டும் அந்த நோயின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறதோ என்ற அச்சம் நாட்டிலே ஏற்பட தொடங்கியிருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் அந்த நோய் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
குறிப்பாக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பேணவேண்டியவர்களாக இருக்கிறோம்.
-முகக்கவசம் அணிதல்,
-கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவிக்கொள்ளுதல்,
-மீற்றர் இடைவெளி பேனுதல்,
போன்ற நடைமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
கடந்த காலங்களில் இந்த நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில் சில தளர்வுகளை நாங்கள் காட்டியிருப்போம். தொடர்ந்தும் அந்த ஆபத்து இருப்பதன் காரணத்தினால் இந்த சுகாதார நடைமுறைகளை தவறாமல் பேணி வருமாறு அக்குறணைவாழ் மக்களை நாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறே தடுமல் காய்ச்சல் போன்ற நோய்நிலைமைகள் அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நாம் அனைவருமாக ஒன்றிணைந்து இந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த நோயின் பாதிப்பிலிருந்து எங்களுடைய நாட்டை எங்களுடைய ஊரை காப்பாற்றிக் கொள்ள முடியும். அதற்காக உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை தந்துதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
தகவல்: அஷ் ஷெய்க் தாரிக் அலி நளீமி. மொழிபெயர்ப்பாளர்,
அக்குறணை பிரதேச செயலகம். 12.07.2020