CID பிரிவினைச் சேர்ந்தவரென்று கூறி பெண் தனியாக இருந்த வீட்டில் கைவரிசை காட்டிய கில்லாடி

பொலிஸ் புலனாய்வு பிரிவினைச் சேர்ந்தவரென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபரொருவர் தனிமையாக இருந்த பெண் ஒருவரின் வீட்டை சேதனையிடும் வகையில் தங்கமோதிரம் ஒன்றையும் 70 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச்சென்றுள்ளார்.

இச் சம்பம் பதுளுபுர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. பதுளுபுர பகுதியின் வீடொன்றில் மேற்குறிப்பிட்ட இருந்த பெண்ணின் இரு புதல்வர்களும் தொழிலுக்கு சென்றுள்ளனர். அப்பெண்ணின் மகள் மேலதிக வகுப்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அப்பெண்மட்டுமே வீட்டிலிருந்துள்ளார். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நபர், குறிப்பிட்ட வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

தலைக்கவசத்துடன் அவ்வீட்டிற்குள் புகுந்த நபர் தான் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் இவ்வீட்டில் ஹெரோயின் போதைவஸ்து விற்பனையில் தங்களின் புதல்வர்கள் ஈடுபட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிட்டியுள்ளதுஎனவும் அதுகுறித்து சோதனையிடவே தான் முதலில் வந்ததாகவும் பின்னால் பொலிஸார் வருவார்களென்றும் வீட்டிலிருந்த பெண்ணிடம் கூறி அப்பெண்ணை கதிரையொன்றில் அமரச் செய்த பின்னர் வீட்டில் தேடுதல்
களை மேற்கொண்டார்.

அதையடுத்து அந் நபர் அறைக்குள் சென்று அலுமாரியை சோதனையிட்டு அங்கிருந்த பதினையாயிரம் ரூபா பெறுமதிமிக்க தங்க மோதிரமொன்றையும் எழுபதாயிரம் ரூபா பணத்தையும் திருடிவிட்டு அதைத்தொடர்ந்து அப்பெண்ணிருக்கும் இடத்திற்கு வந்த அந் நபர் பொலிஸார் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வந்து தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொள்வர்களென்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னரே நடந்த திருட்டை அறிந்த அப்பெண் கிராந்துருகோட்டைப் பொலிஸாருக்கு புகார் செய்துள்ளார்.

இப்புகாரையடுத்து பதுளை பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter