தென்மேற்கு ஜப்பானைப் பாதித்த கடும் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் பணியாற்றிய வண்ணம் உள்ளனர்.
கியுஷு பிராந்தியத்தில் கடும் மழை, நிலச்சரிவுகள் தொடர்பில் இரண்டாவது உயர் மட்ட அவசரகால எச்சரிக்கையை ஜப்பானின் வானிலை அவதான நிலையம் இன்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரையில் குறைந்தது 50 உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டசின் கணக்குக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.