பூகம்பத்திலிருந்து பாதுகாப்பாக தப்பிக்க கூடிய வகையில், மணிக்கு 360 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய புதிய புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ் புதிய புல்லட் ரயிலானது ஜப்பானின் ரயில்களில் வேகமான, மென்மையான, மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பானது என வர்ணிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவை ஒசாகா மற்றும் கோபியுடன் இணைக்கும் ரயில் சேவையில் இவ் ரயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் லித்தியம் அயன் மின்கலங்கள் உள்ளன, எனவே இதனால் மேல்நிலை சக்தி இல்லாமல் இயங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
N700S என பெயரிடப்பட்டுள்ள இவ் ரயில், 360 கிமீ (223 மைல்) வேகத்தைக் கொண்டுள்ளது.
டோக்கியோவை ஒசாகா மற்றும் கோபியுடன் இணைக்கும் இவ் ரயில் சேவை உலகின் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
1964 ஒக்டோபர் 1, அன்று டோக்கியோவிற்கும் ஒசாகாவிற்கும் இடையில் முதல் புல்லட் ரயில்கள் இயங்கத் தொடங்கியபோது இது உலகின் முதல் அதிவேக பாதையாக மாறியது – மேலும் இது 12,400 அடி உயர புஜி மலையை கடந்து செல்கிறமை குறிப்பிடத்தக்கது.