இலங்கையின் பொருளாதரம் 5.5 சதவீதமாக குறைவடையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை

கொரோனா தாக்கத்தின் விளைவாக இவ் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக குறைவடையும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

இது தெற்காசியாவிற்குள் மூன்றாவது மோசமான செயல்திறன் ஆகும்.

கொவிட்-19 பரவலுடன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

அதே நேரத்தில் தெற்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியானது மொத்தமாக  6.8 சதவீதமாக குறைவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி மாலத்தீவின் பொருளாதாரம் 20.5% ஆகவும் இந்தியாவின் பொருளாதாரம் 9% ஆகவும், பாகிஸ்தானின் பொருளாதாரம் 0.4% ஆகவும், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் 5% ஆகவும் வலுவிழக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும் 2020 ஆம் ஆண்டில் பங்களாதேஷின் பொருளாதாரம் 5.2% ஆகவும், பூட்டானின் பொருளாதாரம் 2.4% ஆகவும், நேபாளம் 2.4% ஆகவும் வளர்ச்சியடையும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter