உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் கோட்பாட்டாளர் நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் முன்னிலையில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஆஜரானார்.
நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் காலை 9.30 மணிக்கு முன்னிலையானதுடன், சுமார் 6 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28ம் திகதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் மத்திய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன, நௌபர் மௌலவியே பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி என்பதை வெளிப்படுத்தினார்.
மத்திய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த தெரிவிக்கையில், தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் நிறுவனர் சஹ்ரான் ஹாசிம் அல்ல மாறாக நௌபர் மௌலவியே இருந்ததாகக் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டது சஹ்ரான் குழு என்கின்ற போதிலும் தேசிய தவ்ஹூத் ஜமாதின் தத்துவ ஞானியாக கைது செய்யப்பட்டு நௌபர் மௌலவி செயற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பினுள் அன்டன் பாலசிங்கம் போன்று தேசிய தவ்ஹீத் ஜமாத்தினுள் நௌபர் மௌலவி செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் 19 வருடங்களாக கட்டாரில் இருந்த ஒருவர் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 13ம் திகதி என்டேரமுல்ல பகுதியில் உள்ள விடோன்றில் தலைமைத்துவம் தொடர்பில் தீவிரவாதிகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏப்ரல் மாதம் 22ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.