சர்வதேச விண்வெளி நிலையம் இன்று (14-09-2020 திங்கட்கிழமை) மாலை இலங்கையில் வெற்றுக் கண்ணுக்குத் தெரியும்.
சர்வதேச விண்வெளி நிலையம் இன்று இலங்கையில் வெற்றுக் கண்ணுக்கு (மேகங்கள் மறைக்காது இருந்தால்) எல்லா இடங்களிலும் மாலை 6:42 மணி முதல் தெரியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி தெரிவித்துள்ளார்.
ஈசாவின் கொலம்பஸ் ஆய்வகத்துடன் கூடிய சர்வதேச விண்வெளி நிலையம் ஈர்ப்பு விசையை மீறும் வேகத்தில் 400 கி.மீ உயரத்தில் பறந்துகொண்டு இருகின்றது – அதாவது. மணிக்கு 28,800 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த விண்வெளி ஆய்வகம் பூமியினை முழுமையான சுற்ற வெறும் 90நிமிடங்களே எடுக்கின்றது.
இதில் பணி புரியும் மற்றும் வாழும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களை அனுபவிக்கின்றனர்
தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day