திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் விரைவில்

‘திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்லாம் சமய பாட­நூல்கள் அடுத்த மாதம் நவம்பர் ஆரம்­பத்தில் அதி­பர்கள் ஊடாக மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண பரீட்­சையைக் கருத்­திற்­கொண்டு 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்­பு­க­ளுக்­கான பாட­நூல்­க­ளுக்கு விநி­யோ­கத்தில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும்’ என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பீ.என்.அயி­லப்­பெ­ரும ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு இஸ்லாம் பாட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு மீள வழங்­கப்­படும் என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் திருத்­தப்­பட்ட இஸ்லாம் பாட­நூல்கள் அச்­சி­டு­வ­தற்­கான காகிதம் தட்­டுப்­பாட்­டினால் தாம­த­மேற்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார்.

மாண­வர்­களின் கல்­வியில் தடைகள் ஏற்­ப­டு­வ­தற்கு கல்வி வெளி­யீட்­டுத்­தி­ணைக்­களம் ஒரு­போதும் உடந்­தை­யாக இருக்­காது எனவும் அவர் உறு­தி­ய­ளித்தார். உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக ஆராய்ந்து வாக்கு மூலம் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்வைத்த பரிந்­து­ரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய இஸ்லாம் சமய பாட­நூல்கள் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டதால் மாண­வர்­க­ளுக்­கான பாடநூல் விநி­யோகம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டன.

விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்த பாட­நூல்கள் கல்வி வெளி­யீட்­டுத் ­தி­ணைக்­க­ளத்­தினால் மீள பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

தரம் 6, 7, 8, 10 மற்றும் 11 ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் பாட­நூல்­களில் அடிப்­ப­டை­வாத வச­னங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் வாக்குமூல­ம­ளிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே அந்­நூல்­களின் விநி­யோகம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­ட­துடன் விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்த நூல்கள் மீளப்­பெற்றுக் கொள்­ளப்­பட்­டன.

பீ.என்.அயி­லப்­பெ­ரும இவ்­வி­வ­காரம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் அடங்­கி­யி­ருந்த சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. சில வச­னங்கள் நீக்­கப்­பட்­டன. சில வச­னங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன. இஸ்லாம் மார்க்­கத்­துக்கு பாதிப்­பில்­லா­த­ வ­கையில் கல்வி வெளி­யீட்­டுத்­ தி­ணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான முஸ்லிம் அதி­கா­ரி­களின் சிபா­ரி­சின்­படி திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

திருத்­தங்­களைச் செய்து பாட­நூல்கள் அரச அச்­சக திணைக்­க­ளத்­துக்கு கடந்த மே மாதம் அனுப்பி வைக்­கப்­பட்­டன. ஒரு நூல் தனியார் அச்­ச­கத்­துக்கு வழங்­கப்­பட்­டது.தனியார் அச்­சகம் நூல்­களை அச்­சிட்­டுள்­ளது. அரச அச்­சக திணைக்­க­ளமும் அச்­சிடும் பணி­களை பூர்த்தி செய்­துள்­ளது. காகி­த ­தட்­டுப்­பாடே தாம­தத்­திற்கு கார­ண­மாகும்.
6,7,8,10 மற்றும் 11 ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் மத ­பா­ட­நூல்கள் சிங்­களம் மற்றும் தமிழ் மொழியில் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்­டுள்­ளன.தரம் 1 முதல் 5 வரையும் மற்றும் 9ஆம் தர பாட­நூல்­களில் எவ்­வித திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

கல்வி வெளி­யீட்­டுத்­தி­ணைக்­களம் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டா­த­வாறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. ஆனால் அச்­ச­கத்தின் தாமதம் எமது கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்­ட­தாகும்.

எவ்­வா­றெ­னினும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருத்­தப்­பட்டு அச்­சி­டப்­பட்­டுள்ள புதிய இஸ்­லா­மிய பாட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். அதற்­கான ஏற்பாடுகளை திணைக்களம் முன்னெடுத்துள்ளது என்றார்.

இதேவேளை அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் 6,7,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இஸ்லாம் பாடத்தை ஒரு பாடமாக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு 2021 டிசம்பர் முதல் பாடநூல்கள் இல்லை என நீதிக்கான மையம் எனும் சிவில் அமைப்பு மாணவர்கள் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை அண்மையில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)விடிவெள்ளி இதழ் 20/10/2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter