கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் பதவி விலகினார்கள்.

நாட்டு நலனுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் கோட்டபய ராஜபக்க்ஷ பதவி விலகிய பின்னரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது. கலவரத்தை அடக்கு முறையாலேயே அடக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (05)  இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(இராஜதுரை ஹஷான்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Visitor Counters Flag Counter