சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான நகர்வுகள்

புதிய ஜனாதிபதியாக ரணில்‌ விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளதையடுத்து புதிய தற்காலிக அமைச்சரவையும்‌ நியமிக்கப்‌பட்டிருக்கின்றது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்‌ மீண்டும்‌ அமைச்சர்‌ பதவிகளை ஏற்றிருக்கின்றனர்‌. எனினும்‌ ஏற்கனவே வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர்‌ பீரிஸ்‌ அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார்‌. அவருக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்‌பினர்‌ அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்‌.

பாராளுமன்றத்தில்‌ நடைபெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில்‌ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்‌ தவிசாளர்‌ ஜீ. எல்‌ பீரிஸ்‌ டலஸ்‌ அழகப்பெரு மவை ஆதரித்திருந்தார்‌. இந்நிலையில்‌ தற்போது அமைச்சரவையில்‌ இருந்து பேராசிரியர்‌ பீரிஸ்‌ நீக்கப்பட்டுள்ள நிலையில்‌ அந்த பதவி அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்‌ இது தற்காலிக அமைச்சரவை என்றும்‌ சர்வ கட்சி அரசாங்கத்தின்‌ நிரந்தர அமைச்சரவை விரைவில்‌ நியமிக்கப்படும்‌ என்று அரசாங்க தரப்பில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம்‌ திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில்‌ நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில்‌ 134 வாக்குகளைப்‌ பெற்று ஐனாதிபதியாக தெரிவுசெய்யப்‌பட்ட ரணில்‌ விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில்‌ நடை பெற்ற அவசரகால சட்டத்தை மேலும்‌ ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பிலும்‌ வெற்றிபெற்றுள்ளார்‌. ஜனாதிபதி தெரிவில்‌ மறுபக்கம்‌ இருந்த சில எம்‌. பி. க்கள்‌ கூட அவசரகால சட்டம்‌ மீதான வாக்கெடுப்பில்‌ அரசாங்கத்தை ஆதரித்‌துள்ளனர்‌. அதன்படி ஜனாதிபதி ரணில்‌ விக்ரமசிங்க தனது அடுத்தடுத்த பலப்ப ரீட்சைகளில்‌ வெற்றிபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில்‌ விரைவாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌ என்று எதிர்பார்க்கப்‌ படுகின்றது. ஜனாதிபதி ரணில்‌ விக்‌கிரமசிங்க இதற்‌கான அறிவிப்பை ெவளியிட்டு இருப்பதுடன்‌ பல்வேறு தரப்பினருடன்‌ பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதையும்‌ காண முடிகிறது. முக்கியமாக தற்போது எதிர்க்கட்சித்‌ தரப்பில்‌ இருந்து சர்வகட்சி அரசாங்கம்‌ தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில்‌ உரையாற்றிய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ தலைவர்‌ சஜித்‌ பிரேமதாச தாங்கள்‌ இந்த அரசாங்கத்தில்‌ பங்குதாரர்களாக இடம்பெற மாட்டோம்‌ என்றும்‌ ஆனால்‌ வெளியிலிருந்து தேவையான ஆதரவை வழங்குவோம்‌ என்றும்‌ குறிப்‌பாக மேற்பார்வை குழுக்களில்‌ இடம்பெறுவோம்‌ என்றும்‌ அறிவித்திருந்தார்‌.

எனினும்‌ ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சி ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்க தலைமையிலான சர்வ கட்சி அரசாங்கத்தில்‌ இடம்‌ பெறுவதற்கு ஒரு சாதகமான அணுகுமுறையை வெளியிட்டியிருக்கின்றது. ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்கவுடன்‌ கடந்த வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சியின்‌ பிரதிநிதிகள்‌ பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்‌. அப்போது சர்வகட்சி அரசாங்கம்‌ தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்‌திரக்‌ கட்சி முன்வைத்த யோசனைகளை சாதகமாக பரிசீலிப்பதாக ஐனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்க அறிவித்திருக்‌கின்றார்‌.

இந்நிலையில்‌ விரைவாக அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள்‌ நடத்தப்பட்டு சர்வ கட்சி அரசாங்கத்தில்‌ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கொள்வதற்கான சாத்‌தியம்‌ இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சுதந்திர கட்சி மிக சாதகமாகவே ஆராய்ந்து வருகிறது.

அதேபோன்று தேசிய சுதந்திர முன்‌னணியும்‌ சர்வக கட்சி அரசாங்கத்துடன்‌ இணைந்து கொள்ளும்‌ சாத்தியமிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில்‌ உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின்‌ தலைவர்‌ விமல்‌ வீரவன்ச சர்வகட்சி தொடர்பான ஒரு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார்‌. அதாவது இந்த அரசாங்கத்தை தாம்‌ கவிழ்க்க போவதில்லை என்றும்‌ நாடு ஸ்திரமடைவதற்கு அரசாங்கம்‌ இருப்பது அவசியம்‌ என்றும்‌ அவர்‌ தெரிவித்திருந்தார்‌.

அதேபோன்று பிரதான்‌ எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்‌ சக்தியிலிருந்தும்‌ ஒரு சிலர்‌ அரசாங்கத்தில்‌ இணைந்து கொள்ள போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்‌ ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ அறிவிப்பு தெளிவாக இருக்கின்றது. அதாவது அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும்‌ வகையிலான பங்குதாரராக அரசாங்கத்தில்‌ இணைந்து கொள்ள மாட்டோம்‌ என்பதை ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ நிலைப்பாடாக இருக்கின்றது. மேலும்‌ இலங்கை தொழிலாளர்‌ காங்கிரஸும்‌ சர்வ கட்சி அரசாங்‌கத்தில்‌ இணைந்து கொள்ளும்‌ என்று எதிர்‌ பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக அக்‌கட்சி அறிவிப்பையும்‌ வெளியிட்டுள்ளது.

மேலும்‌ தமிழ்‌ முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌, அகில இலங்கை மக்கள்‌ காங்கிரஸ்‌ போன்ற கட்‌சிகளும்‌ சர்வகட்சி அரசாங்கம்‌ தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன என்றே தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக தமிழ்‌ முற்போக்கு கூட்டணியின்‌ தலைவர்‌ மனோ கணேசனும்‌ இது குறித்து ஆராய்ந்‌துவருவதாகவே தெரிவிக்கப்படுகின்‌றது.

எனினும்‌ சர்வகட்சி அரசாங்கத்தில்‌ இணைவதா இல்லையா என்பது இன்னும்‌ இறுதி முடிவாக இக்கட்சிகளினால்‌ தீர்மானிக்கப்படவில்லை. எப்படி இருப்பினும்‌ இந்த கட்சிகளும்‌ பெரும்பாலும்‌ சர்வ கட்சி அரசாங்கத்தின்‌ பங்குதாரர்களாக இடம்‌ பெறுவது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்கலாம்‌ என்றே தகவல்கள்‌ தெரிவிக்‌கின்றன.

தற்போதைய சூழலில்‌ நாட்‌டையும்‌ மீட்டெடுப்பதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும்‌ என்பது தொடர்பாக இந்த கட்சியின்‌ முக்கிய பிரமுகர்கள்‌ ௧௬துவதாகவும்‌ தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில்‌ 30 அமைச்சர்களைக்‌ கொண்ட ஒரு சர்வ கட்சி அமைச்சரவை விரைவில்‌ நியமிக்கப்படலாம்‌. எனும்‌ ஸ்ரீலங்கா சுதந்‌திரக்‌ கட்சி ஜனாதிபதி ரணில்‌ விக்ரமசிங்‌கவுக்கு முன்வைத்திருக்கின்ற சர்வ கட்சி அரசாங்கம்‌ தொடர்பான யோசனைகளில்‌ அமைச்சரவையானது 15 முதல்‌ 20 வரை இடம்பெற வேண்டும்‌ என்று கூறியிருக்‌கின்றது. என்னிடம்‌ ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்‌ மகிந்த அமரவீர அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்‌. எப்படி இருப்பினும்‌ ஒரு சர்வ கட்சி அரசாங்‌கத்தை அமைக்க வேண்டும்‌ என்பதே ஜனாதிபதி ரணில்‌ விக்ரமசிங்கமின்‌ நோக்‌கமாக காணப்படுகிறது. காரணம்‌ சர்வதேச மட்டத்தில்‌ பேச்சுவார்த்தைகள்‌ நடத்தி உதவிகளை பெற்றுக்‌ கொள்வதற்கு இலங்‌கையில்‌ ஒரு அரசியல்‌ ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும்‌. அவ்வாறான ஒரு அரசியல்‌ தன்மை உருவாக்கப்பட வேண்‌டுமாயின்‌ நாட்டில்‌ சர்வ கட்சி அரசாங்கம்‌ அமைக்கப்பட வேண்டும்‌. அதனூடாகவே சர்வதேசத்தின்‌ நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியும்‌. ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது சுயாதீனமாக செயல்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்‌ சம்பிக்க ரணவக்கவும்‌ தமது யோசனைகள்‌ ஜனாதிபதி ரணில்‌ விக்ரம்சிங்கவினால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌ பட்சத்தில்‌ சர்வ கட்சி அரசாங்கத்தில்‌ இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்‌.

அதன்படியே விரைவாக சர்வ கட்சி அரசாங்கம்‌ அமைக்கப்படும்‌ என்று எதிர்‌ பார்க்கப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள்‌ தற்போது பல மட்டங்களிலும்‌ எடுக்கப்படுவதுடன்‌ அது தொடர்பான பேச்சு வார்த்தைகளும்‌ அணுகுமுறைகளும்‌ இடம்பெற்று வருவதை காண முடிகிறது. அதாவது சர்வகட்சி அரசாங்கம்‌ எவ்வளவு காலத்துக்கு அமைக்கப்படும்‌? அமைச்சரவை எண்ணிக்கை என்ன? பொருளதார வரைபடம்‌ எவ்வாறு இருக்கும்‌ ? எவ்வளவு காலத்தில்‌ தேர்தல்‌ நடக்கும்‌ என்பன தொடர்பாகவே தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இதேவேளை நாட்டு மக்கள்‌ பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிக்குள்‌ சிக்கித்‌ தவித்துக்கொண்டிருக்கின்ற சூழலில்‌ அதனை மீட்டெடுக்கும்‌ பாரிய பொறுப்பை ஜனாதிபதி ரணில்‌ விக்கி ரமசிங்க கொண்டுள்ளார்‌. முக்கியமாக எரிபொருள்‌ பற்றாக்குறை மற்றும்‌ மின்‌வெட்டு காரணமாக நாட்டின்‌ சகல துறைகளும்‌ கடுமையான நெருக்கடியை சந்தித்‌துள்ளன. முக்கியமாக கல்வி, சுகாதாரம்‌, வர்த்தகத்துறை, தொழிற்சாலைகள்‌ போக்‌குவரத்து என சகல செயற்பாடுகளும்‌ ஸ்தம்பிதமடைந்துள்ளன.

ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாடசாலைகள்‌ மூடப்பட்டு தற்போது திறக்கப்‌பட்டுள்ளன. அத்தியாவசியப்‌ பொருட்‌களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள்‌ பிரச்‌சினை, போக்குவரத்து நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு பொருட்களுக்கான விலை உயர்வு, வாழ்க்கை செலவு சுமை என மக்கள்‌ கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்‌. மக்களினால்‌ தமது வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாது தத்தளித்துக்‌ கொண்டுள்ள சூழலில்‌ ஐனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்க இந்தப்பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்க என்ன செய்யப்‌போகிறார்‌ என்பதே மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்‌சுவார்த்தைகள்‌ நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவை மீண்டும்‌ விரைவாக துரிதப்படுத்தப்பட்டு அதனூடாக கடனைப்‌ பெற்றுக்கொண்டு நாட்டின்‌ பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. அதற்கான வேலைத்திட்டமும்‌ விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்‌.

ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்க சர்வதேச ரீதியில்‌ மிக சிறந்த தொடர்புகளை கொண்டிருப்பவர்‌. எனவே அவரால்‌ பொருளாதாரத்தை கட்டியெ ழுப்பும்‌ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்‌ என்று நிபுணர்களினால்‌ தெரிவிக்‌கப்படுகின்றது.

இந்நிலையில்‌ விரைவாக மக்களுக்கு பொருளாதார நிவாரணத்தை பெற்றுக்‌ கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்‌பட வேண்டும்‌. முக்கியமாக புதிய வரவு செலவுத்‌ திட்டம்‌ விரைவாக முன்வைக்கப்‌பட்டு அதன்‌ ஊடாக பாதிக்கப்பட்ட மக்‌களுக்கு நிவாரணங்களும்‌ சலுகைகளும்‌ வழங்கப்பட வேண்டியது முக்கியமாகும்‌.

தற்போதைய சூழலில்‌ நாட்டின்‌ பல்வேறு துறைகளும்‌ பொருளாதார மற்றும்‌ டொலர்‌ நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, தொழிற்சாலைகள்‌ , வர்த்தக துறை, சுற்றுலாத்துறை என சகல செயல்பாடுகளும்‌ பாதிக்கப்‌பட்டுள்ளன. தொழில்வாய்ப்புக்களை பெருக்கும்‌ ஆற்றலைக்கொண்டுள்ள சிறிய மற்றும்‌ நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள்‌ கடுமையான நெருக்கடியை தமது வர்த்தக செயற்பாடுகளை கொண்டு செல்வதில்‌ சந்தித்துள்ளனர்‌. இவை தொடர்பில்‌ ஆராயப்பட்டு தேவையான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படவேண்டும்‌.

வீரகேசரி 30/07/2022 பக்கம் 04

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter