அக்குறணை நகரில் 400 இலட்சம் ரூபாய் செலவில் நவீன முறையிலான வர்த்தக நிலைய தொகுதியை அமைப்பதற்கு, அக்குறணை பிரதேச சபை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (19) நடைபெற்ற மாதாந்த கூட்டத்திலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் முன்வைத்த இப் பிரேரணைக்கு சபையின் ஏனைய அங்கத்தவர்கள் ஏகமனதாக ஓத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான வணிக நகரமாக கருதப்படும் அக்குறணை நகரில், இவ்வாறான நவீன வர்த்தக நிலையம் ஒன்றினை நிறுவுவது மூலம் நகரின் அபிவிருத்தி துரிதப்படுவதுடன் பிரதேச சபைக்கு பிரத்தியேக வருமானத்தை பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றும் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.
அக்குறணை நகரில் தற்போது பஸ் தரிப்பிடம் அமைந்துள்ள சிறு வர்த்தகத் தொகுதியில் இந் நவீன வர்த்தக நிலையத்தினை நிர்மாணிக்க உள்ளதாகவும் அதன் நிர்மாணப்பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்க படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மொஹமட் ஆஷிக் (தமிழ்மிரர் 21/7/22)