O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

க.பொ.த சாதாரண தர அனுமதி அட்டை இதுவரை பெற்றுக் கொள்ளாத மாணவர்கள் அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. திரு தர்மசேன கூறுகிறார்.

இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிடவும், அதில் க.பொ.த. O/L தேர்வு 2021/22 அனுமதி அட்டை “டவுனலோட்” ஐகானைத் தேர்ந்தெடுத்து, தேசிய அடையாள அட்டை எண் அல்லது தேர்வு எண்ணை கொடுத்து அனுமதி அட்டை நகலைப் .

உரிய நுழைவுச்சீட்டில் திருத்தங்கள், பெயர் திருத்தங்கள், பாடத் திருத்தங்கள் மற்றும் ஊடகத் திருத்தங்கள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 0112784208 மற்றும் 0112784537 அல்லது 1911 ஆகிய இலக்கங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter