உக்கலை பிரதேசத்திற்கான புதிய மையவாடி.

உக்கலை பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மையவாடியை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு

மிக நீண்ட காலமாகவே மையவாடி ஒன்று இல்லாதிருந்ததன் காரணமாக உக்கலை மக்கள் ஜனாஸா நல்லடக்கங்களில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவதற்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.

அக்குறணை பிரதேசத்திலுள்ள சில நலன்விரும்பிகள் மற்றும் கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடனும் பிரதேச மக்களினது பூரண ஒத்துழைப்புகளுடனும் மையவாடிக்கு பொருத்தமானதொரு காணி தேர்வு செய்து வாங்கப்பட்டு, அதனை சீரமைத்து மக்களுக்கு கையளித்த நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

உக்கலை முக்கர்ரம் மஹல்லாவின் நிர்வாக குழு அங்கத்தவர்கள், முக்கர்ரம் மஹல்லா ஜனாஸா கமிட்டி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பணி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. அக்குறணை பிரதேச சபையினூடாக இதன் ஆரம்ப கட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹஸன் அவர்கள், ஸலீம் அவர்கள், நீரெல்லை சமூன் அவர்கள், உட்பட துனுவிலை சாயிம்ஷா ஆகியோருடன் பிரதேச வாசிகளும் இணைந்து இதன் கொள்வனது, சீரமைப்பு பணிகளில் தியாகங்களுடன் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

மேற்குறித்த நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான உபைதுர்ரஹ்மான் அவர்கள், திருமதி ஷபானி அவர்கள், அக்குறணை பைத்துல் மால் தலைவர் ஷியாம் மௌலவி அவர்கள், அக்குறணை ஜம்மியதுல் உலமா உப தலைவர் அஹ்மத் முஸம்மில் மௌலவி அவர்கள், முக்கர்ரம் ஜனாஸா கமிட்டி தலைவர் இக்ரம் மௌலவி உட்பட பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.

akurana-today-3
akurana-today-4
akurana-today-5
akurana-today-2
akurana-today-6
akurana-today-7

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter