படிப்பினைகளை கற்றுக்கொண்டு புதிய பாதைகளை கண்டறியவும்!

பதுக்கிவைத்து, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தல்‌, விலையை அதிகரித்தல்‌, வரிசையில்‌ காத்திருக்க வைத்தல்‌ இவ்வாறு, நெருக்கடிகள்‌ நீண்டுகொண்டே செல்கின்றன. இந்தப்‌ பட்டியலுடன்‌, வரிசையில்‌ நிற்குக்கும்‌ போது மரணிக்கும்‌ சம்பவங்களும்‌ சேர்ந்துவிட்டன.

எரிபொருளுக்கான வரிசை, நீண்டு கொண்டே செல்கின்றது. மண்ணெண்ணெய்‌ வாங்குவதற்காக காத்திருந்த 717 வயதான முதியவர்‌, மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம்‌ வத்தேகம, உடதலவின்ன பகுதியில்‌ மார்ச்‌ 19ஆம்‌ திகதி பதிவானது. கடவத்தையைச்‌ சேர்ந்த ஒட்டோ சாரதியான 70 வயதானவர்‌ நேற்று (20) மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்‌.

நாட்டின்‌ சிரேஷ்ட பிரஜைகள்‌ இருவரும்‌, இவ்வாறு நடுவீதியில்‌ மரணமடைந்துவிட்டனர்‌. இறுதிக்‌ காலத்தை, வீடுகளில்‌ இருந்து ஓய்வெடுக்க வேண்டியவர்களை, மிகமோசமான நிர்வாகம்‌, நடுவீதிக்கு இழுத்துவந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

ஏற்கெனவே, சுட்டிக்காட்டியதைப்‌ போல, கட்டுப்பாடு இன்மையால்‌, விலைகள்‌ நாளுக்கு நாள்‌ எகிறிக்கொண்டே போகின்றன. ஒருவேளை உணவாக பால்தேநீரை பருகி, வயிற்றுக்கு ஆதாரம்‌ தேடிக்கொண்டவர்கள்‌, அந்தப்‌ பக்கமே தலைவைத்துப்‌ படுக்கமுடியாத அளவுக்கு விலை எகிறி நிற்கின்றது.

இந்த விலை அதிகரிப்புகளை இறுதியானதாக யாரும்‌ நினைத்து விடக்கூடாது. இன்னும்‌ என்னனென்ன பொருட்களுக்கு, விலை அதிகரித்து விட்டிருக்கிறது என்பதை, பொருட்களைக்‌ கொள்வனவு செய்யும்‌ போதுதான்‌ தெரியும்‌. அப்போது, ஒவ்வொருவர்‌ மீதும்‌ மின்சாரம்‌ பாய்ந்தால்‌ போல இருக்கும்‌.

உள்நாட்டு அரிசி, பால்மா, காஸ்‌, அலைபேசி அழைப்புகள்‌, குறுஞ்செய்தி ஆகியவற்றுக்கான கட்டணங்களும்‌ அதிகரித்துவிட்டன. அலைபேசி அழைப்புக்‌ கட்டணங்கள்‌ அதிகறிக்கப்பட்டதன்‌ ஊடாக, ‘வீட்டில்‌ சமைக்கவில்லை’ எனக்‌ கூறுவதற்குக்‌ கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆக, புலம்பல்களும்‌ குறைந்துவிடும்‌.

இதற்கிடையில்‌, சர்வகட்சி மாநாட்டைக்‌ கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது, காலம்‌ கடந்த ஞானமாக இருந்தாலும்‌, உருப்படியான தீர்மானங்கள்‌ அம்மாநாட்டில்‌ எடுக்கப்பட வேண்டும்‌. எனினும்‌, ஒருசில கட்சிகள்‌, கால்களை இழுத்துவிடும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டுள்ளன. இந்த மாநாட்டில்‌, நெருக்கடிகளுக்கான தீர்வைக்‌ காணும்‌ வழிவகைகள்‌ குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்‌.

நெருக்கடிகள்‌ உச்சம்‌ தொட்டுவிட்டன. மக்களால்‌ வாழமுடியாத சூழல்‌ ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளை நோக்கி நரகமுடியாமல்‌ தவிக்கின்றனர்‌. விலைகள்‌ அதிகரிக்கப்பட்ட போதெல்லாம்‌, மேற்கொள்ள வேண்டிய எல்லா மாற்று ஏற்பாடுகளையும்‌ எடுத்துவிட்டனர்‌. இனியும்‌ யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில்‌, மூளையும்‌ களைத்துவிட்டது.

வரிசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்‌. இல்லையேல்‌ மயங்கிவிழுந்து மரணிப்போரின்‌ எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்‌. வரிசையில்‌ நிற்போரில்‌ பெரும்பாலானவர்கள்‌ சாப்பிடாமல்‌ வந்திருப்பர்‌. மண்ணெண்ணெய்‌ வாங்கிச்சென்றால்‌ தான்‌, பலரின்‌ வீடுகளில்‌ அடுப்பு எரியும்‌.

மக்களை வீதியில்‌ நிற்கவிடாமல்‌, சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும்‌. கிடைக்கும்‌ முதலாவது சந்தர்ப்பத்திலேயே ஓரளவுக்கேனும்‌ நிவாரணங்களை வழங்கவேண்டும்‌. நெருக்கடிகளுக்குள்‌ மூழ்குவதை விட, அவற்றிலிருந்து கற்ற படிப்பினைகளைக்கொண்டு, புதிய பாதைகளைக்‌ கண்டறியவேண்டுமென வலியுறுத்‌துகின்றோம்‌. (தமிழ் மிரர் 21/3/22)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter