வாகன லைசன்ஸ் மற்றும் புதிய வாகன நம்பர் பிளேட்டுகளை தபால் மூலம் வீடுகளுக்கு வழங்குவதற்கான ஒரு திட்டம் தொடங்கப்படும் என்று வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில்வே வண்டிகள் மற்றும் மோட்டார் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இனி பழைய வாகனத் தகடுகளை மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நம்பர் பிளேட்டுகளை எரித்து அழிக்கும் பொறுப்பு வாகன உரிமையாளர்களிடமே வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் வண்டிகள் மற்றும் மோட்டார் கைத்தொழில் துறை அமைச்சர் திலம் அமுனுகாமா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனத்தை விற்கும்போது நம்பர் பிளேட்டுகளை மாற்ற வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை அகற்றி புதிய முறையை வகுப்பதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இலங்கை பெரிய மாநிலங்களைக் கொண்ட நாடு அல்ல. எனவே, இத்தகைய சட்டங்கள் தேவையின்றி மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றன.
எதிர்வரும் காலங்களில் வாகன நம்பர் பிளேட்டுகளில் வாகன உரிமையாளர் சம்பந்தப்பட்ட தகவல்களை இணைப்பதற்கு உத்தேசித்துள்ளோம். நம்பர் பிளேட்டினை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் பண்ணுவதன் மூலம் வாகனத்தின் உரிமையாளரின் தகவல்களை எளிதாக அடையாளம் காண முடியும் என்று ராஜாங்க அமைச்சர் கூறினார்.