சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் / பொறுப்பாளர்களுக்கும்
பள்ளிவாசல்கள் தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள்
சுகாதார அமைச்சின் DGHS/Covid-19/347/2021 இலக்க மற்றும் 28.02.2022ம் திகதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், பள்ளிவாசல்களில் கூட்டு வணக்க வழிபாடுகள் மற்றும் வழமையான மார்க்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.
இது சம்பந்தமாக, இலங்கை வக்பு சபையினால் பின்வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுவதுடன் அவைகள் அனைத்து பள்ளிவாசல்களின் நிருவாகிகளினாலும் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
- ஐவேளைத் தொழுகைகள், ஜும்ஆத் தொழுகைகள் மற்றும் ஜனாஸாத் தொழுகைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டு தொழுகைகளையும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு வழிகாட்டுதல்களின் பிரகாரம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
- நிகாஹ் போன்ற மார்க்க செயற்பாடுகள் மற்றும் ஒன்றுகூடல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு வழிகாட்டுதல்களின் பிரகாரம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
- மேலே 1 மற்றும் 2ல் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்க செயற்பாடுகளின் போது பின்வரும் கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பள்ளிவாசல்களின் நிருவாகிகள் / நம்பிக்கையாளர்கள் / பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
a) பள்ளிவாசல் வளாகத்தினுள் எல்லா நேரமும் அனைத்து நபர்களும் வாய் மற்றும் மூக்கினை மறைத்து முறையாக முகக் கவசம் அணிதல் கட்டாயமானதாகும்.
b) தொழுகையின் போது அனைவரும் சொந்தமான தொழுகை விரிப்பினை (முசல்லா) பயன்படுத்துவதுடன், வீட்டிலிருந்து வுழு செய்து கொண்டு வருதல் வேண்டும். அத்துடன் பள்ளிவாசலிலுள்ள ஹவுழ் (நீர்த் தொட்டி) மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
c) அனைத்து கூட்டு வணக்க செயற்பாடுகளின் போதும் சுகாதார அமைச்சு, இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் முன்னைய கொவிட் வழிகாட்டுதல்களின் பிரகாரம் சமூக இடைவெளி பேணப்படுதல் கட்டாயமானதாகும்.
d) மேலே 1 மற்றும் 2 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கமான செயற்பாடுகளில் உள்ளடங்காத, பெருமளவான ஜமாஅத் அங்கத்தவர்கள் கலந்து கொள்கின்ற விஷேட மார்க்க செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் நடாத்துவதற்கு இலங்கை வக்பு சபைக்கு அறிவித்து விஷேட அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
மேற்படி வழிகாட்டுதல்களை பள்ளிவாசல்கள் / தக்கியாக்கள் / ஸாவியாக்கள் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுவதுடன், தவறும் பட்சத்தில் ஆகியவற்றின் நம்பிக்கையாளர்கள் /பொறுப்பாளர்கள் கண்டிப்பாக அவ்வாறானவர்களுக்கு எதிராக இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்றாஹிம் அன்ஸார்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்