ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு!

வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் வரவட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோனி ஜோன் புள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன், டொலர் தட்டுப்பாடும் அதனை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலை காரணமாக புதிய கடனட்டைகள் முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் காலாவதியான அட்டைகளுக்கான புதிய அட்டை என்பவற்றை பெற்றுக் கொள்வதில் மக்கள் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த மைக்ரோ சிப் வகைகளை இலங்கையில் தயாரிக்க முடியாது.

உரிமம் பெற்ற நிறுவனங்களினால் மாத்திரமே அவற்றை தயாரிக்க முடியும் என அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோனி ஜோன் புள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி வரையில் நாட்டில் 2,171,348 கடனட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் 17,696,356 வரவட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹிரு செய்திகள் –hirunews.lk- (2022-03-03 14:23:47)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter